பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் அறிவியலும் 3. சமயம் என்பது உடல் ஒம்புதலுடன் உயிர் உய்வதற். கும் உள்ள நெறியைச் காட்டுகின்றது. அறிவியல் பூத உடலை ஒம்பும் நெறியுடன் அகிலத்தின் நிலைமையையும் ஆய்ந்த உண்மைகளைக் காட்டுகின்றது. இதனால் ஆண்ட வனின் படைப்பின் வியப்பையும் விந்தையையும் தெரிவிக் கின்றது.இறைவனின் படைப்பைக்கூர்ந்து அறியும் அறிவிய லறிஞன் இறைவனை நெருங்கி ஆராய்பவனாகின்றான்: என்று எங்கோ ஐன்ஸ்டைன் என்ற அறிவியல் மேதை கூறியது இப்போது நினைவிற்கு வருகின்றது. எனவே, சமயமும் அறிவியலும் இணைந்து நிற்பதைச் சில நிகழ்ச்சி களால் அறிந்து தெளிவோம். அணு-அண்ட அமைப்பு : எல்லாச் சாலைகளும் உரோமா புரியை நோக்கிச்செல்லுகின்றன என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. இதனை நம் நாட்டுப் பழமொழி ஆறுகள் யாவும் ஆழ் கடலை நோக்கிச் செல்லுகின்றன’ என்று கூறும். இக்கருத்தைக் குலசேகரப் பெருமாள். தொக்கு இலங்கி யாறு எல்லாம் பரந்து ஒடித் தொடுகடலே புக்கு அன்றிப் புறம்கிற்க # மாட்டாத (பெரு. திரு 5:3) என்று பாசுரமிட்டுக் காட்டுவர். இங்கு சாலை ஆறு' * உரோமா புரி கடல் இவை குறியீடுகளாக நின்று ஒரு பேருண்மையை விளக்குகின்றன. இவைபோலவே சமயமும் அறிவியலும் ஒரு முறையில் இறைவனையே நோக்கிச் செல்லுவனபோல் அமைகின்றன. அணு-அண்ட அமைப்பு இம்முறையில் அமைந்து இறை தத்துவமாக-நடராசதத்துவ மாக-விளக்கம் தருகின்றது. பண்டையோர் அநுபவ அறிவு மேல்நாட்டிலும் சரி, நமது நாட்டிலும் சரி அநுபவ அறிவுதான் அறிவியல் அறிவாகப் பரிணமிக்கின்றது. ஆதியில் இயற்கையை