பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வாய்மொழியும் வாசகமும் ஆசாய்ந்த மனிதன் சில உண்மைகளைக் கண்டான். ஒன்றாய் இருந்த விதை பின் வேராய், அடிமரமாய், கிளையாய், கோம்பாய், கவடாய், இலையாய், பூவாய், காயாய் என்று பலவகையாக மாறுவது போலவே, வித் தென அருவமாய் நின்றவை மரம் என உருமாறியது என்று அவன் கருதினான். இக்கொள்கையைப் பரிணாம வாதம். கூர்தல் அறம் - என்று வழங்கினர். உலகில் எதனை அடிப்படை என்பது? மண் என்றனர்.சிலர்: நீர் என்றனர் பிறர்: தி என்றனர் ஒருசாரார். காற்று என்றனர் பிறி தோச சாரார். வேறு சிலர் வான் என்றனர் . இந்த வாதத்தில் கலந்து கொள்ள விரும்பாத சிலர் தென்காசி வழக்காக ஐந்தும் அடிப்படை என்றனர். இத்தகைய கொள்கையை வற்புறுத்தியவர் அரிஸ்ட்டாட்டில் என்ற மேனாட்டு அறிஞர். நம் நாட்டு அறிஞர் தொல்காப்பியர், கிலம் தீ நீர்வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம்’ என்று கூறினார். இவற்றைப் பஞ்ச பூதங்கள் என்று வழங்கினர் பின்வந்தவர்கள். ஆழ்வார்களும் நாயன்மார் களும் இறைவனையே ஐம்பெரும் பூதங்களில் காண் கின்றனர். - திடவிசும்பு எரிவளி ர்கிலம் இவைமிசை படர்பொருள் முழுவதுமாய் அ வைய வைதொறும் உடன்மிசை உயிரெனக் கரங் தெங்கும் பரந்துளன்? என்பது நம்மாழ்வார் திருவாய்மொழி. 2. தொல். பொருள். மரபு.91 3. திருவாய் 1.1:7