பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I4 வாய்மொழியும் வாசகமும் என்று விளக்கியுரைக்கின்றார். இதில் கைபுனைந் தியற்றாக் கவின் பெறு வனப்பு என்ற முறையில் உலகத் தைக் காண்கின்றோம். பின்னர் சித்தாகிய உயிர்கள் கிருஷ்ணராஜசாகர் மேட்டுர் அணை போன்ற கை புனைத்தியற்றியதால் கர்நாடக மாநிலத்தின் பல பகுதி களும், தஞ்சை மாவட்டத்தில் பல பகுதிகளும் கைபுனைந் இயற்றிய கவின் பெறுவனப்பு என்ற முறையில் வண்ணக் கனஞ்சியமாக, பலப்பல அழகுகளுடன் பொலியச் செய்யப் பெற்றிருப்பதைக் கண்டு மகிழலாம். கிருஷ்ண ராஜ சாகரின் அருகில் தோற்றுவிக்கப்பெற்ற பிருந்தாவனம் கை புனைந்து இயற்றப் பெற்ற ஓர் அற்புத வண்ணக் களஞ்சியம். மேட்டுர் அணையின் நீர் பாய்வதால் தஞ்சை மாவட்டம் நெற்களஞ்சியம் என்று பெரும்பேர் பெற்றுத் திகழ்கின்றது. இறுதியில் இந்த ஆருயிர் கட்கு, "முக்தியென் றொருகிலை சமைத்தாய் அங்கு முழுதினையும் உணரும் உணர்வு அமைத்தாய். பக்தியென் றொருங்லை வகுத்தாய்-எங்கள் பரமா ! பரமா பரமா ! என்று முக்தியை அமைத்த பேருண்மையையும், அதனை அடைய பக்தி பிரபத்தி போன்ற வழிகளையும் வகுத் துக் காட்டிய அற்புதத்தையும் வியந்து போற்றுகின்றார். பாரதிதாசனின் அழகின் சிரிப்பு என்ற நூலில் பல்வேறு வண்ணக் களஞ்சியங்களை (கை புனைந் தியற்றாக கவின்பெறு வனப்பைக்) கண்டு, அநுபவித்து மகிழலாம். - அண்டமும் பிண்டமும் : அண்டத்தில் போல்த்தான் பிண்டத்திலே’ என்பது நமது நாட்டில் வழங்கிவரும் பழமொழி. இந்தப் பழமொழியின் உண்மை அனுi