பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் அறிவியலும் 13 பொன்' போல்வது; காரியப்பிரபஞ்சம்' என்பது குடம்' "அணி போல்வது.அது போலவே இறைவன் காரியப்பிரபஞ் சத்தைக்காரணப் பிரபஞ்சத்திலிருந்து தோற்றுவித்துப் பிறகு அதிலே ஒடுக்குகின்றான். ஆனால் காரணப் பிரபஞ் சத்தைத் தோற்றுவித்தல் இல்லை. ஆகவே இறைவன் படைக்கின்றான் அழிக்கின்றான்' என்றால் அவ்வாறு செய்வது காரியப் பிரபஞ்சத்தைத்தான் எனவும், காரண்ப் பிரபஞ்சம் அனாதி நித்தியம்’ எனவும் பகுத்துணர்ந்து தெளிவுபெறல் வேண்டும். இங்ங்ணமே வைணவத்திலும் இறைவன் நித்தியன்; அவன் திருமேனி, நித்தியம்; அது நுண்ணிய நிலையை அடைதல் பிரளயம்; பரு நிலையை அடைதல், படைப்பு’ என்பதாகச் சிந்தித்து உணர்தல் வேண்டும். மகாகவி பாரதியாரும் இவ்வுலகப் படைப்பையும் அதில் ஆருயிர்கள் துய்ப்பதையும், - எத்தனை கோடி இன்பம் வைத்தாய்-எங்கள் இறைவா இறைவா இறைவா . என்று எக்களிப்புடன் போற்றுகின்றார்; இதனை, சித்தினை அசித்துடன் இணைத்தாய். அங்கு சேரும் ஐம் பூதத்து வியனுல் கமைத்தாய் அத்தனை யுலகமும் வண்ணக் கலஞ்சிய மாகப் பலப்பலகல் அழகுகள் சமைத்தாய் 12. பா. க: இறைவா !