பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வாய்மொழியும் வாசகமும் தோன்றாது என்பது மறக்க முடியாத உண்மை யாகும். ஆகவே, தூலமான்த் தோன்றும் பொருள்கள் யாவும் அவ்வாறு தோன்றுவதற்கு முன்னர் சூக்குமமாய் உள்ள பொருள்களே என்பது தெளிவாகின்றதல்லவா? இவ்விடத்தில் இன்னொன்றும் கருதத் தக்கது. இல் லாமல் பிறவாது சட்டியிலிருந்தாலன்றோ அகப்பையில் வரும் என்பன போன்ற முது மொழிகள் பலவும் சற்காரிய வாதத்தின் அடிப்படையிலே தோன்றியனபோல் தோன்று கின்றது. இந்த வாதமுறை இல்லையாயின் மண்ணிலிருந்து ஆண்டயும், நூலிலிருந்து குடமும், நெல்லிலிருந்து கமுகும் தோன்றாமல் மண் முதலியவற்றிலிருந்து குடமும், ஆடை யும், தெல்லுமே தோன்றுகின்ற வரையறை இல்லா தொழி யுக், இன்னும் சிலவற்றைச் சிந்திப்போம். நிலத்தைத் தோண்டினால் நீர் தோன்றுகின்றது; சில இடங்களில் பாதை தோன்றுகின்றது. கோலார் போன்ற இடங்களில் பொன் முதலிய விலையுள்ள பொருள்கள் தோன்றுகின்றன. தற்காலத்தில் பல ஆற்றுப் படுகைகளில் பெட்ரோலியம் தோன்றுகின்றது. காரணம், அப்பொருள்கள் ஆங்காங்கே இருப்பதேயாகும் என்பது தெளிவு. ஆகவே, உள்ளவையே தோன்றும் என்ற சற்காரியவாதம் எளிதில் உடன் படக் கூடியது. இவற்றிலிருந்து இன்னோர் உண்மையையும் நாம் அறிகின்றோம், நிலத்தினுள் நீர் முதலியன பரு நிலையில் இருத்தலால் அவற்றது உண்மை எளிதில் புலனாகின்றது. ஆனால் மண் முதலியவற்றில் குடம் முதலியவை நுண்ணிய நிலையில் இருத்தலால் அவற்றின் உண்ம்ை அரிதில்தான் உணர முடியும்; சிந்தித்துதான் தெளிதல் வேண்டும். இப்படித் தெளிவானாலும் இறைவன் உலகைப் படைக்கின்றான்; அழிக்கின்றான்' என்பதன் கருத்தும் சித்தித்துதான் அறிய வேண்டியதாகின்றது. உலகம்' என்பது காரணப் பிரபுஞ்சம் காரியப் பிரபஞ்சம்’ என இருவகைப்படும். காரணப் பிரபஞ்சம் என்பது மண்'