பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிமயமும் அறிவியலும் 互夏 குடம்' என்ற நிலையை அடைந்தது என்பதே பொருன், * குடம் அழிந்தது" என்பதில் குடம் என்ற நிலையிலிருந்து முன்போல் மண்' என்னும் நிலையை அடைந்தது என்பதே பொருளாகும். இவ்வாறு நிலை வேறுபடினும், இரு நிலை யிலும் பொருளின் தன்மை ஒன்றாகவே இருக்கும். இங்க னமே பொன்’ என்றும் அணி என்றும் வேறு வேறு பொருள்போல வழங்கினாலும் பொருள் தன்மையால் அவை ஒன்றேயாதல் தெளியப்படும். இதனை இன்னொரு விதமாகவும் விளக்கலாம். தோற் றமும் அழிவும் பொருள்களின் நிலை மாற்றங்கள் என்பது எப்படி? முன் சூக்குமமாய்-நுட்பமாய்-விளங்காது உள்ள பொருளே பின் துாலமாய் பருமையாய்-விளங்கி நிற்கும். இரண்டு எடுத்துக்iாட்டுகளால் இந்த உண்மை தெளியப் படும். எள்ளைப் பிழிந்தால் எண்ணெய் தோன்றும். மண் லைப் பிழிந்தால் எண்ணெய் தோன்றுமா? தோன்றாது. ஏன் தோன்றாது? எள்ளில் எண்ணெய் சூக்குமமாய் உள்ளது. மணலில் எண்ணெய் எவ்வகையிலும் இல்லை. அதனால் எள்ளைப் பிழிந்தால் எண்ணெய் தோன்றுகின்றது; மன லைப் பிழிந்தால் எண்ணெய் தோன்றுவதில்லை. மற்று மோர் எடுத்துக்காட்டு முயற்குட்டி, பசுங்கன்று, யானைக் கன்று இவற்றின் தலையில் தொடக்கத்தில் கொம்பு இல்லை நாளடைவில் பசுங்கன்றின் தலையில் கொம்பு தோன்றுகின்றது. இதுபோலவே, யானைக் கன்றின் வாயி லிருந்தும். தந்தம் தோன்றுகின்றது. ஏன்? பசுங்கன்றின் தலையில் கொம்பு குக்குமமாய் உள்ளது. அதனால் அது பின்பு துாலமாய்த் தோன்றுகின்றது. யானைக் கன்றின் வாயிலும் தந்தம் சூக்குமமாய் உள்ளது; அதனால் அது பின்பு துாலமாய்த் தோன்றுகின்றது. முயல் குட்டியின் தலையில் முன்பு கொம்பு எவ்வசையிலும் இல்லை; அதனால் அஃது எக்காலத்திலும் தோன்றுவதில்லை. இவ ற் றால் இல்லாதது எக்காலத்திலும் இல்லாததே என்பது தெளிவு. அதனால் உள்ளதுதான் தோன்றும், இல்லது