பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் அறிவியலும் 31 அநுபவமாகக் கண்டுள்ளனர். அறிவியலறிஞர்களின் அணுவியலும் ஞானச் செல்வர்களின் அநுபவ இயலும் ஒரிடத்தில் சந்திப்பதை ஆய்ந்து பார்ப்போர் நன்கு அறிவர். அணுக்கோயிலின் முன் நிற்கும் விஞ்ஞானிகளும் அண்டக்கோயிலின்முன் நிற்கும் மெய்ஞ்ஞானிகளும் ஒரே உண்மையைத்தான் காண்கின்றனர் என்பதை நாம் அறியுங்கால் எல்லையற்ற மகிழ்ச்சியடைகின்றோம். இறை வன் படைப்பை எண்ணி எண்ணி வியக்கின்றோம். அண்டங்களின் அமைப்பு : முதலாவதாக அண்டங் களின் அமைப்பை நோக்குவோம். இந்த அகிலத்திலுள்ள (Universe) அண்டங்கள் யாவும் கதிரவமண்டலத்தில் அமைந்துள்ளன. வான் வெளியில் கோடானு கோடி அண்டங்கள் உள்ளன. கண்ணைச் சிமிட்டும் கோடானு கோடி விண்மீன்கள் உள்ளன. ஒவ்வொன்றும் நமது கதிரவனுக்கு ஒப்பானது. ஒவ்வொன்றுக்கும் பேருருவ மும் சுய ஒளியும் உண்டு. அத்தனையும் அண்டங்களே. அளப்பரிய சேய்மையிலிருப்பதால் பேராற்றல் மிக்க ஒரு தொலை நோக்கியில் கூட அவை சிறு சிறு புள்ளிகள்போல் தோன்றுகின்றன. கதிரவ்ன் மண்டலத்தில் நாம் காண்ப தென்ன? நடுவில் கதிரவன். அக்கோளைச் சுற்றிப் பலப்பல மண்டலங்களில் புதன், வெள்ளி, பூமி செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ முதலிய கோள்கள் சுற்றிச் சுற்றி வருகின்றன. இரண்டாவதாக, அணுவின் அமைப்பையும் நோக்கு வோம். அணு மிகமிக நுண்ணிய துகள். பேராற்றல் வாய்ந்த துண்பெருக்கியால் (Microscope) காண முயன்றா லும் அது நம் கண்ணுக்குப் புலனாகாது. அரைக்கோடி அணுக்களை அணிவகுத்து நிற்க வைத்தால் அவை நாம் எழுதும்போது இடும் ஒருசிறு முற்றுப் புள்ளியினுள் அடங்கி விடும், இத்தகைய ஒரு சிறு அணுவின் நடுவிலிருப்பது உட் கரு (Nucleus). அதில் சிலபுரோட்டான்களும் சிலவகை