பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வாய்மொழியும் வாசகமும் கான ஆண்டுகட்கு முன்னர் தெண்ணிர்க் கயத்துட் சிறு மீன் சினையினும் மிகச் சிறிய ஆலம் விதையில் ஒளித்து கொண்டிருந்தது. காலச் சக்கரம் சுழன்று சுழன்று விதை யில் ஒளிந்து கொண்டிருந்த நுண் ணிய சிறிய ஆலமரத்தை மெல்ல மெல்ல இழுத்து வெளிக் கொணர்ந்து விட்டது. இநத அகிலத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் யாவும் காலச் சக் ரத்தின் சுழற்சியில் வெளி வந்தவையே, ஆகவே நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டும் சூத்திர தாரராக இருப்பது காலம் என்ற திகிரி எனலாம். நீலத்திகிரி : நீலமலை. இது திருமால் கடல் கடைந்த ஞான்று மத்தாகப் பயன் படுத்தப்பட்ட மந்தர மலை, இதனை யொத்தவர் திருஅரங்கத்தில் அறிதுயில் கொண் டிருக்கும் அரங்கர். கோலத்திகிரி : இஃது அரங்கர் கையிலிருக்கும் சுதர்சனம் என்னும் சக்கரம்; திருவாழி ஆழ்வான். இஃது அவன் கையை விட்டுப் பாய்ந்து மரம் நடுபவர் முதலில் போடும் கோலப்புள்ளிகள் போல உலகப் படைப்புக் காலத்தில் புள்ளிகள் போட்டது. அந்தக் கோலத்தில் காலத்திகிரி பய பக்தியோடு உருண்டுசென்றது. காலத்திகிரியினின்றும் பிறந்து, கடிகாரச் சக்கரங்கள் போல் அதோடு இணைந்து நிற்கும் ஞாலத்திகிரி, முதுநீர்த் திகிரி முதலியதிகிரிகளெல்லாம் நியதி தவறாமல் தொடர்ந்து சுழன்றன. இந்தத்திகிரித் தொடர்களைக் கற்பனையில் கண்டு உலகப்படைப்பைச் சிந்திச கின்றார் அய்யங்கார், கூர்தல் அறக் கொள்கை அய்யங்கார் சிந்தையில்-சிந்த னையில்-ஒர் அற்புதக் கவிதையாக மலர்ந்து விட்டதைக் கண்டு வியப்பெய்துகின்றோம். பாசுரத்தை மீண்டும் ஒரு முறைபாடி கவிதையதுபவத்தில் திளைப்போம். அணு, அண்ட அமைப்பு : அணுவின் அமைப்பும் அண்டங்களின் அமைப்பும் ஒப்புடையனவாக உ என் வான என்று அறிவியலறிஞர்கள் ஆய்வுகளால் மெய்ப்பிததுள்ள னர். அறிவியலறிஞர்கள் ஆய்வுகள் மூலம் கண்ட வற்றையே நம் நாட்டு ஞானச் செல்வர்கள் உள்ளுணர்வால்