பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் அறிவியலும் # 9 மண்ணுமணி முழவதிர வானரங்கில் நடம்புரிவான் இரவி யான கண்ணுதல்வா னவன் கனகச் சடை விரிந்தால் எனவிரிந்த கதிர்கள் எல்லாடி ? பாடலை மீண்டும் மீண்டும் படித்துச் சுவைத்துக் காட்சியை மனத்திரையில் பதியச் செய்து அதுபவித்து மகிழ வேண்டும். இங்ங்னம் தன்னைத்தானே சுற்றி வரும் கதிரவன் கவிஞர் கண்ணுக்கு உருளைபோல்-திகிரிபோல்.தென்படு கின்றான். இவனைச் சுற்றி வரும் பூமியும் ஒர் உருளைபோல் காணப்படுகிறது. இதுவே ஞாலத்திகிரி என்பது. முதுநீர்த் திகிரி : ஒவ்வோர் அண்டத்துடன் அவ்வண்டத்திலுள்ள பொருள்களும் உருமாறிச் சுழல்கின்றன. எ-டு பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலமும் பூமியுடன் சேர்ந்தே சுழலு கின்றது. பூமியிலுள்ள கடல் நீர், நீராவி. மேகம் மலை. ஆறு என்று மாறிக் கடலுடன் கலக்கின்றது. மீண்டும் நீராவி-மேகம்-மழை-ஆறு-கடல் என்று சக்கரம் சுழலு கின்றது. இவ்வாறு கடல் நீர் சுற்றுவதை முதுநீர்த்திகிரி' என்கின்றார் (முதுநீர்-கடல் நீர்). இந்தச் சக்கரத்தைப் போலவே இளவேனில், முதுவேனில், கார், கதிர், முன் பணி, பின்பனி என்ற பருவச் சக்கரமும் பிறப்பு இறப்பு சக்கரமும் சுழன்று வருகின்றன. இவற்றை மனக் கன் னால் காண வேண்டும். காலத்திகிரி : இது கண்ணுக்குத் தெரியாத சக்கரம் . இதுவே ஞாலத்திகிரி, முது நீர்த்திகிரி முதலியவற்றை இயக்கும் ஒர் அற்புதத் திகிரி. இதன் திருவிளையாடலை ஒர் எடுத்துக் காட்டால் விளக்குவேன். பெரிய ஆலமரம் ஒன்று அடையாறு ஆலமரம் போன்றது. அதற்கு வயது நூற்றுக் கணக்கானது. நூற்றுக் கணக் 19. கம்ப. பால, மிதிலைக்-153 20. இதுவே வைணவதத்துவத்தின் அசித்து என்பதன் ஒரு பகுதியான காலதத்துவம். இது சத்துவ சூனிகம் எனவும் வழங்கப் பெறும். - %۰ * بہتی . : . ; : ...