பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் அறிவியலும் 29 (Horse-Power) அளவு கொண்ட ஆற்றலைப் பூமி பெறுகின்றதாக அறிவியலறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர். இதில் மூன்றில் ஒரு பகுதி ஏரி, கடல் முதலிய நீர் நிலைகளிலிருந்து நீரை ஆவியாக மாற்றுவதற்குப் பயன்படுகின்றது. இவ்வாறு நீராவியாகச் செல்லும் நீர்தான் பின்னர் மலைகளின் உச்சியில் மேகமாக நின்று மழையாகப் பொழிகின்றது. மழை நீள் ஆறுகளாகப் பாய்வத னால் அருவிகள் (Water-tails) உண்டாகின்றன. உலகி லுள்ள எல்லா ஆறுகளிலும் ஒடுகின்ற நீரின் ஆற்றலைக் கொண்டு சுமார் 35 கோடி குதிரைத் திறன் அளவு ஆற்ற லைப் பெறலாம் என்று மதிப்பிடுகின்றனர். கதிரவனின் வெப்பத்தை யொட்டியே காற்றுகளும் வீசுகின்றன, பருவக் காற்றுகளால்தான் மழையும் பெய்கின்றது. உழவுத் தொழில் நடைபெறுவதற்குக் கதிரவனே முதற்காரணம் ஆவான். இத்தனை நிகழ்ச்சிகட்கும் நெருப்புக் கோளம் போல் உள்ள கதிரவன் ஒவ்வொரு தொடிக்கும் நாற்பது இலட்சம் டன் அளவு தேய்ந்து அழிகின்றமையே காரண மாகும். இவற்றையெல்லாம் விளக்குவது போல், பரிதி யென்னும் பொருளிடை ஏய்ந்தனைப் பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை: கரிய மேகத் திரளெனச் செல்லுவை; காலும் மின்னென வந்துயிர் கொல்லுவை: சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை; சூழும் வெள்ளம் எனஉயிர் மாற்றுவை; விரியும் நீள்கடல் என்ன நிறைந்தனை: வெல்க காளி யெனதம்மை வெல்கவே. 30 என்று பாடுவார் பாரதியார். ஆற்றலைக் காளியாகவே உருவகித்துப் போற்றுவார். 30. பா. க தோ-பா. மகாசக்தி வாழ்த்து-3