பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so வாய்மொழியும் வாசகமும் தாவரங்களின் செயல் : தாவரங்களின் வாழ்வில் ஒளிச் சேர்க்கை என்பது இயற்கையில் நடைபெறும் ஒர் அற்புத நிகழ்ச்சி. தாவரங்கள் காற்றிலுள்ள கரியமிலவாயு, வேர் களின் மூலம் பெறும் நீர் இவற்றை உட்கொண்டும் கதிரவன் ஒளிக் கதிர்களாகவும் வெப்பக்கதிர்களாகவும் உமிழும் ஆற்றலைத் துணைகொண்டும் (இதுதான் அணுவாற்றல்; நீசிய உட்கருக்கள் பகிதிய உட்கருக்களாக மாறுங்கால் உண் டாவது) கார்போஹைட் ரேட்டுகள் போன்ற பொருள் களைச் சேமித்து வைக்கும் நிகழ்ச்சிதான் ஒளிச்சேர்க்கை (Photo - Synthesis) என்பது. தாவரங்கள் கதிரவன் ஒளியைக்கொண்டே வாழ்கின்றன என்பதை நாம் அறி ஜோம். ଏ#ଣ୍ଡ ର ? கதிரவனிடமிருந்து ஒளியையும் வெப்பத்தையும் நேரே விழுங்குகின்றன. இந்த உலகில் தாவரங்களைத் தவிர் வேறு எந்தப் பொருள்களும் கதிரவ னிடமிருந்து நேரடியாக ஆற்றலைப் பெறுந்திறன் அடைய வில்லை. மனிதன் உட்பட விலங்கு, பறவை முதலிய பிரா னிகள் யாவும் கதிரவன் காலும் வெப்பத்தையும் ஒளியை யும் விழுங்காமல் அவற்றை விழுங்கிய தாவரங்களை விழுங் கிக் கதிரவனின் ஆற்றலைப் பெறுகின்றன. புலி, சிங்கம் போன்ற புலால் உண்ணும் விலங்குகளோ கதிரவன் ஆற்றலை நேரே விழுங்குவதில்லை. தாவரம் உண்டாக்கும் பொருள்களை விழுங்குவது மில்லை. அவை பயிருண்ணும் விலங்குகளைக் கொன்று தின்று ஆற்றலைப் பெறுகின்றன. எனவே, இப்புவியிலுள்ள பிராணிகள் அனைத்தும் பகல வனிடமிருந்தே ஆற்றலைப் பெறுகின்றன என்பது வெள் விடை விலங்கல், இதன் அறிகுறியாகத்தான் தமிழர்கள் பொங்கல் விழாவினைக் கொண்டாடுகின்றனர். தாவரங்களிடம் தேங்கிய ஆற்றல் : தாவரங்களின் ஒவ் வோர் அணுவிலும் கதிரவனிடமிருந்து வரும் ஆற்றல் அடங்கிக் கிடக்கின்றது. இந்த ஆற்றல்தான் பூமியிலிருந்து கிடைக்கும் நிலக்கரியிலும், மண் எண்ணெய் போன்ற நீர்ம