பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கியமும் அறிவியலும் 忍瓦 எரியை களிலும் (Liuபid fuel) அடங்கிக்கிடக்கின்றது. நிலக்கரி என்பது என்ன? பண்டைக்காலத்திலிருந்த காடு கள்தாம் காலப்போக்கில் நிலத்தினுள் அழுந்தி உருமாறி நிலக்கரியாக மாறி யு ள் ள ன. நீர்ம எரியைகள் யாவும் இப்பழைய மரங்களின் சாலுகளேயாகும். ஆகவே தாவரங்களின் ஒளிச்சேர்க்கையால் கதிரவனிட மிருந்து மரத்தினுள் அன்று புகுந்த ஆற்றல் அங்கேயே உறைந்து கிடக்கின்றது. அவ்வாறு உறைந்து கிடக்கும் ஆற்றல்தான் நம் உடலினுள்ளோ வெளியிலோ எரிதல் நிகழும்பொழுது உருகி வழிகின்றது:நாம் மீண்டும் வெப்பத் தையும் பெறுகின்றோம்; ஒளியையும் அடைகின்றோம். எரியைகளிடமிருந்து கிடைக்கும் ஆற்றலைக் கொண்டு இயந்திரங்களையும் இயக்குகின்றோம். இந்த நிகழ்ச்சிகளால் கதிரவனே ஆற்றலின் மூலம் என்ற உண்மையும் நமக்குப் புலனாகின்றது. கதிரவன் வாழ்க்கையில் உயிர் நாடி மேற்கூறிய வற்றால் கதிரவன்தான் வாழ்கையின் உயிர்நாடியாக அமைகின்றான் என்ப்து தெளிவாகின்றது. இந்த அறிவியல் உண்மையினை அதுபவமாகக் கண்ட இளங்கோ அடிகள் என்ற கவிஞர் கோமான், ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலந்திரித லான் 31. - என்று தாம் இயற்றிய காவியத்தில் மங்கல வாழ்த்துப் பாடலாக வெளியிட்டார். 'கைபுனைந்தியற்றாக் கவின் பெறுவனப்பிவ்' திளைத்த நக்கீரர் பெருமானும், உலகம் உவப்ப வலனேர்வு திரிதரு பலர்புகழ் ஞாயிற். 32 31. சிலம்பு-மங்கல வாழ்த்து-அடி4-8 32. திருமுருகு-அடி1-2.