பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வாய்மொழியும் வாசகமும் என்து தம் திருமுருகாற்றுப் படையைத் தொடங்கு கின்றார். உலகம்' என்பது சீவான் மாக்களை உணர்த்து கின்றது. பலர்' என்பது எல்லாச் சமயத்தினரையும் குறிக் கின்றது. ஆற்றல் மூலமாக, ஆதிமூலமாக விளங்ம் குகதி ரவனே-பொங்கல் திருநாளின் கடவுளாக-உழவர்கள் போற் தும் சூரிய நாராயணனாக விளங்குகின்றான். ஒவ்வோர் ஆண்டிலும் உழவின் பயனாகப் புதியனவாகப் பெற்ற பொருள்களை ஆண்டவன் திருவடியில் காணிக்கையாக வைத்துத் தம் நன்றியைப் புலப்படுத்திக் கொள்ளுகின்றனர் உழவர் பெரு மக்கள்; பொங்கல் விழாவினைப் பூரிப்புடன் கொண்டாடுகின்றனர். இந்த விழாவில் பொங்கலும் அணுவும் இணங்கியிருப்பதைக் காணமுடிகின்றது. கதிரவனிடமிருந்து இயற்றப் பெற்ற ஆற்றல் (அணு வாற்றல்) தாவரங்களின் மூலம் பாய்ந்து பல்வேறு பொருள் களைத் தோற்றுவிக்கின்றன. இப்பொருள்கள் யாவும் ஒன்று சேர்ந்து பொங்கல் வடிவில் காட்சி அளிக்கின்றன. பொங்கவிலுள்ள பொருள்கள் யாவும் உழவன் தாவரங் களின்மூலம் பெற்றவை.நெய், தாவரங்களையுண்ட பசுவின் மூலம் அடைந்த பொருளாகும். பொங்கல் வடிவமாகவுள்ள ஆற்றல், ஆற்றல் வடிவமாகவுள்ள ஆண்டவனுக்கும்-கதிர வனுக்கும்-படைக்கப் பெறுகின்றது. இயற்கை வாழ்வில் தோய்ந்த தமிழர்களின் பொங்கல் விழா அறிவியல் உண்மை யில் அடங்கிய ஒரு பெருவிழாவாக ஆண்டுதோறும் நடை பெற்று வருகின்றது. அணுயுகத்தில் வாழும் நமக்கு அஃது அணுவின் தத்துவத்தை ஒருவாறு விளக்கி நிற்கின்றது. இந்த அடிப்படையில் மேலே குறிப்பிட்ட பாரதியாரின் பாடலுக்குப் பொருள் கண்டு மகிழ்வோமாக. கவிஞன் ஆழ்ந்த பார்வை நமக்குப் புலனாவதைக் காண்போமாக. ஞாயிறு வணக்கத்தின் மெய்ப்பொருளை எண்ணிக் களிப் டோமாக,