பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் அறிவியலும் as அழுகையின் தத்துவம் பிறந்தவுடன் குழந்தை அழு கின்றது. அஃது அழுவதால்தான் மக்கட்பேறு பெற்றிவர் கட்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டாகின்றது. ம்க்கட்பேறு ஏற் பட்ட இல்லங்கட்கு விசாரிக்கவரும் உறவினர்கள், அன்பர்கள், நண்பர்கள், குழந்தை அழுத்தா?’ என்று கேட் பதை நாம் அறிவோம்.இதன் பொருள் என்ன? சீதள அலமா சியை விட எத்தனையோ மடங்கு உயர்ந்த நில்ையிலுள்ள தாயின் கருவறையில் எல்லா நலன்களும் பெற்றுப் பத்துத் திங்கள் பாங்குடன் வளர்ந்த குழந்தை புதியதோர் உலகிற்கு இந்தக் கர்ம பூமிக்கு வருகின்றது. தாயின் கருவறையிலி ருக்கும் போது அதற்கு வேண்டிய 'உண்ணும் சோறு, புருகும் நீர், தின்னும் வெற்றிலை 33 முதலிய அனைத்தை யும். அன்னையிடமிருந்தே பெற்றுவிடுகின்றது. அங்கு அதற்கு ஒரு குறையும் இல்லை. இங்ஙனம் செல்வக்களஞ் சியம் போல் சேம அறையில் எல்லாப் பாதுகாப்புடன் இருக் கும் குழந்தைதானே அனைத்தையும் தேடிக்கொள்ள வேண் டிய புதிய உலகிற்கு வருங்கால அழாமல் என்ன செய்யும்? இந்த அழுகை மொழிதான் குழந்தை தானாகக் கற்றுக் கொண்ட ஒரே மொழியாகும், தன் உயிர்ப்பிலேயே கற்றுக் கொண்டதுமாகும். இந்த ஒரே மொழியைக் கொண்ட் தன் பெற்றோரிடமிருந்து சில திங்கள் காலம் அனைத்தையும் பெற்று வாழ்ந்து வளர்ந்து வருகின்றது. அறிவியல் நோக்கில் காண்போமாயின் குழந்தைக்கு அழவேண்டிய இன்றியமையாமை உண்டு என்பதை அறிய லாம். அன்னையின் கருவறையிலிருக்குங்கால் குழந்தை உயிர்ப்பதில்லை. அன்னை அதனைச் செய்து அதற்கு வேண் டிய உயிர்க் வாற்றை 40xygen) நல்குகின்றாள். ஆதலால் கரு வறை வாழ்வில் குழந்தையின் துரையீரல் (Lungs) செயல் 33. இவை குறியீடுகள் தத்துவ நூலார் இவற்றைத் * தாரக போஷக போக்கியங்கள்' என்பர். في جنسيttr a AFFr@