பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

వీక్లీ வாய்மொழியும் வாசகமும் படுவதில்லை. குழந்தை கருவறையினின்றும் வெளிப் போத்ததும் அஃது அழுவதால் நுரையீரல் செயல்படு கின்றது. பிறந்தவுடன் அஃது அழாவிடில் மருத்துவப் பெண் அதனைக் கிள்ளியாவது அழவைக்கின்றாள். அதன் துரையீரலைச் செயல்படுத்துகின்றாள். இந்த உண்மைதான் "குழந்தை அழுததா?' என்ற வினாவில் அடங்கி உள்ளது. "அழுதபிள்ளை பால் குடிக்கும்’ என்ற பொன்மொழியில் அடங்கிக் கிடக்கும் உண்மையும் இதுதான், பால்குடிக்கும் என்பது ஒரு மரபுத் தொடர். பிழைக்கும்’ என்பது ஒரு இதன் பொருள். இங்ஙனம் பிறர் மகிழ அழுது 'பிழைத்த குழந்தை” தானாக அறிந்த அழுதல் மொழி யைத்தான் தன் வாழ்வுக்குப் பயன் படுத்திக் கொள்வதை அறிகின் றோம். சில குடும்பங்களில் கல் நெஞ்சமுள்ள கணவன்மார் களை அழுதலால் மன முருகச் செய்து தம் காரியங்களைச் சாதித்து கொள்ளும் மனைவிமார்களையும் காண்கின் றோம். தத்துவநோக்கில் இதனைச் சிந்திப்போமாயின் "ஐயோ, ஆண்டவனே! என்னை இந்தப் பொய்யுலகில்பிறவிப் பெருங் கடலில் தள்ளி விட்டாயே, இதிலிருந்து உய்வது எப்படி?’ என்று இறைவனை நோக்கி அழுகின்றது என்றும் கருதலாம். தவிர, ஒரு குழந்தை பிறக்கும்போது அழுகின்றது. சுற்றியிருப்போர், உற்றார் உறவினர் பிள் ளைக் கணியமுது பேசும் பொற்சித்திரம் அந்தக் குடும்ப வாரிசு வந்து விட்டதாக மகிழ்கின்றனர். அந்தக் குழந்தை வளர்ந்து, கல்வி கற்று, வாழ்வில் சான்றோனாகத் திகழ்ந்து இறக்கும்போது எல்லோரும் அழுகின்றனர். பிறக்கும்போது சிரிப்பு, மகிழ்ச்சி, எல்லாம். பிராரப்தம் தீர்ந்து இறக்கும் போது அழுதல், தவிப்பு, எல்லாம். இஃது ஒருமுரண் உரை (Paradox) போல் வழிவழியாக இருந்து வருகின்றது. ஆன்மிக வாழ்விலும் : இங்கினம் உலக வாழ்க்கைக் இப் பெருந்துணையாக இருக்கும் அழுகை ஆன்மிக வாழ்க் கைக்கும் பெருவழியாக அமைவதை அருட் பெருஞ்