பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் அறிவியலும் - . - - 萄莎 செல்வர்கள் நமக்குக் காட்டியுள்ளனர். நூல்வழியாகக் கற்றுணர்ந்த உண்மைகளும் ஆன்மிக நெறியில் உய்வதற்குத் தவறும் பொழுது இந்த அழுகை கை கொடுத்து உதவுவதை விளக்கியுள்ளனர். ஆழ்வார்கள் அருளியுள்ள திருப்பாசுரங் களிலும் நாயன்மார்கள் திருவாய்மலர்ந்துள்ள திருப்பாடல் களிலும் இதற்குச் சான்றுகளைக் காணலாம், திருமங்கையாழ்வார் தம்முடைய வாழ்நாட்களில் பெரும் பகுதி கொன்னே கழிந்தமைக்குக் கழிவிரக்கங் கொண்டு புலம்புகின்றார். - - ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய் கழிந்தன கழிந்த அந்நாட்கள்' என்பது அவர்தம் திருவாககு. ஊமையன் ஒருவன் கனவு கண்டால் அதனை ஒருவரிடம் வாய் விட்டுச் சொல்லி மகிழமுடியாது. ஆகவே, ஊமையன் கனவுகள் பழு தேயாகும். அவன் தன் கனவை வாய்விட்டுச் சொல்ல முடி யாமற் போனாலும்,தன் நெஞ்சாவது நினைந்திருந்து மகிழ் தல்கூடும், அங்ங்ணம்தான் தனக்குள்ளேயே மகிழக் கூடிய விஷயமும் ஒன்றில்லாமையால் ஊமன் கண்ட கனவைவிடத் தன் நாட்கள் வீணாகக் கழிந்து விட்டனவே என்று சோக உணர்வுடன் அழுகின்றான், பொய்கையாழ்வாரும் அன்று திருக்கோவலூரில் தான் கண்ட எம்பெருமானின் திருவடி களைத் தொழுதவாறு கடந்த காலத்தில் இத்தொழுகை யைச் செய்ய முடியவில்லையே என்று பரிதபித்துப் பேசு கின்றார். பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சி அழுதேன் ?? என்பது அவரது திருமொழி. 4ே, பெரிதிரு. 1 , 1 ே 5ே முதல் திருவந், :ே