பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் அறிவியலும் - §§ கென உருகி ஆண்டவனை அழுது அழுது கூவியழைப்பதே அவர் அருளிய திருவாய்மொழி. அவருடைய திருக்குரல் சிந்தைசெல்லாச் சேனெடுந் தூரத்திலுள்ள அந்தமில் இன்பத்து அழிவில் வீடாகிய பரமபதத்திலும் ஒலிக்கும் என் பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. இந்த அழுகைக் குரலைக் கேட்ட பரமபதநாதன் ஆழ்வாருக்குத் தன் திருவடிப் பேற்றை அருளினான் என்பதை "அவா அற்று, வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் என்ற அவரது திருவாக்கினா லேயே அறிகின்றோம், இங்ங்ணமே, சைவ அடியார்களுள் மணிவாசகப் பெரு மான் அழுகையை வீடுபெறும் வழியாகக் கொண்டு உயர்ந்த ஞானியாவார். அவர், யானே பொய்என் நெஞ்சும் பொய் என் அன்பும்பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே : என்று கூறியிருப்பதை அறியலாம், அவருடைய திருவாத கம் முழுவதும் இங்ங்னம் ஆண்டவனை நோக்கி அழுத திருப்பாடல்களே யாகும். இவை இன்று நமக்கு எல்லை, மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன், திருவாசகம் என்னும் தேன்' ஆகத் திகழ்கின்றது. தித்திக்கின்றது. மணிக்க வாசகரின் அழுகைக் குரலை நன்கறிந்த பரஞ் சோதியார் அவரை அழுது அடி அடைந்த அன்பன்'49 என்று போற்றி மகிழ்கின்றார். ஆன்மா, பரமான்மா ஆண்டவன் (பரமான்மா) அறிவு மயமானவன்; ஆன்மாவும் அறிவு மயமானது, மேலும் ஆண்டவனும் ஆன்மாவும் அறிவுக்கும் இருப்பிட 41. திருவாய் 10, 10: 10 42. திருவா, திருச்சதகம்-90 43, பரஞ்சோதி-திருவிளையாடல்-மதுரை-21