பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

壽謝 காய்மோழியும் வாசகமும் உருகிக் கண்ணீர் பெருக நின்றால், பாவியான அடியேன் சேவிக்கும்படியாகக் கண்ணுக்கு இலக்காகி வந்து, "ஆழ்வாரே! நீ பாவி என்று சொன்னாலும்போதும்: அதுவும் சொல்லுகின்றாய் இல்லை என்பது இதன் கருத்து பிறிதொரு பாசுரத்தில், பாரிஒர் அடிவைத்து அதன் கீழ்ப் பரவை கிலமெல்லாம் தாங்ஒர் அடியார் எல்லா உலகும் தடவந்த மாயோன்! உன்னைக் காண்பான் வருந்தி ன்னைநாளும் தீயோடு உடன்சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ? ? (பாய் பரப்பி வைத்து, தாய்-தாவி, அளந்து தடவந்த ஆக்கிரமித்த! - என்று கூறுவர், முன்னிரண்டு அடிகளின் கருத்தை ஆறா யிரங்படியில் 'என்னை உன் திருவடிகளிலே சேர்க்க வேணு மென்று உலகத்தை அளக்கும் செயலை வியாஜமாகக் கொண்டு விலையில்லாத ஒர் இரத்தினம் கொடுத்து தேடு வாரைப் போலப் பெரிய வருத்தத்தோடே உன் திருவடி யாலே என்னைத் தேடிக் கொண்டு திரிந்த உன்னை' என்று பிள்ளான் அருளிச் செய்துள்ளார். நீ என்னைத் தேடித் திரிந்த காலத்தில் உனக்கு நான் அகப்பட்டேன் இல்லை; உன்னை நான் தேடித்திரியும் இக்காலத்தில் எனக்கும் நீ அகப்படுகின்றாய் இல்லை' என்று ஆழ்வார் கூறுவது போல் உள்ளது. இங்ஙனம் - ஆழ்வார் திருநகரியில் திருப்புளியாழ்வார் நிழலிலிருந்துகொண்டு - ஒலி பரப்பும் வானொலி நிலையத் தில் இருப்பதுபோல் இருந்து கொண்டு-அழலிலிட்ட மெரு 40. திருவாய் 6. 9: 6