பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் அறிவியலும் g? என்பது அத்தகைய அழுகையைக் காட்டும் பாசுரப் பகுதி சம்சாரமாகிய பெருங்காடு நிறைந்த சரீர சம்பந்தத்தைக் தவிர்த்துத் தருகின்ற எம்பெருமானைக் காணும் பொருட்டு ஆழ்வார் கவல்வதைப் பாசுரம் காட்டுகின்றது. இங்குச் 'சம்சாரம் என்பது பிறவித் தொடர்கள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கை, இன்னொரு பாசுரத்தில், கூவிக் கூவிக் கொடுவினைத் துற்றுள் கின்று பாவியேன் பலகாலம் வழிதிளைத் தலமர்கின்றேன் 83 Iதுாறு - புதர், அலமர்தல் - வருந்திக் கிடத்தல்) என்று பேசுகின்றார். இங்குத் துரறு' என்பது மேலே குறிப் பிட்ட சம்சாரத்தையே குறிக்கின்றது: இன்னொரு பாசுரத்தில் ஆழ்வார் தமக்குக் காட்சி தந்தருளுமாறு வேண்டுவது கல் நெஞ்சத்தையும் உருக்கும் தன்மையது. தாவி வையங்கொண்ட எந்தாய்! தாமோதரா என்று என்று கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால் சபாவி நீ என்று ஒன்று சொல்லாய் பாவியேன் காண வந்ததே ' என்பது அப்பாசுரப் பகுதி. திருவடிகளால் மூன்று உலகங் களையும் அகப்படுத்திக் கொண்ட எந்தையே! தாம்பால் யாப்புண்ட தழும்பை வயிற்றிலுடையவனே என்று பல காலும் விடாயுடன் கூவிக் கூவி நெஞ்சு நீர்ப்பண்டமாக 38. திருவாய் 3, 2: 9 39. டிெ 4, 7, 3