பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமயமும் அறிவியலும் 每葛 லேயே அறிவியலறிஞர்கள் பயனத்தில் சென்றவர்கட்குத் தரையிலிருந்துக் கொண்டே அம்புவிபற்றிய விவரங்களைத் தந்து கொண்டே எச்சரிக்கையையும் தந்தனர். அண்மையில் செவ்வாய்க்கு ஆளில்லாப் பயணங்களை மேற்கொண்டு வெற்றி கண்டளர். செவ்வாய்க் கோளில் உயிர் உண்டா? என்ற சோதனையையும் நடத்தி வருகின்றனர். எல்லாக் கோள்களையும் எட்டிப்பிடிக்க முயல்வதற்கு இந்தத் தர்ம பூத ஞானம் அவர்கட்குத் துணைபுரிகின்றது. இந்தத் தர்ம பூத ஞானத்தால்தான் நாம் விஞ்ஞானத்தை மெய்ஞ்ஞான மாகவும் மெய்ஞ்ஞானத்தை விஞ்ஞானமாகவும் காண்கின் றோம். அறிவியலும் ஆன்மிக இயலும்-அறிவியலும் சமயமும்-ஒரு தளத்தில் ஓரிடத்தில் சந்திப்பதையும் உணர்கின்றோம். அறிவியல் காணாத காணமுயலு கின்ற-ஆன்மிக இயலின் முடிவையும் காண முயலு கின்றது இந்தத் தர்மபூத ஞானம். இதுவே அவன் அருளால் அவன்தாள் வணங்கவும் 45 வழி காட்டுகின்றது. எனவே அன்பர்களே, நாம் மேற்கொள்ளும் அன்றா டக் கடன்கள் முதல் பண்டையோர் அதுபவ அறிவுவ்ரையில் எல்லா நிகழ்ச்சிகளும் அறிவியல் அடிப்படையில் அமைத் துள்ளன என்று காட்டப்பட்டன. இங்ங்ணம் காட்டுங்கால் அணு அமைப்பும் அண்ட அமைப்பும் ஒன்றாகவே உள்ளன என்றும், உலகத்தோற்றம் (Evolution), உலக அழிவு (Involution) இவை பற்றி சமயமும் அறிவியலும் கிட்டத் தட்ட ஒரே விதமாகப் பேசுகின்றன என்றும், சற்காரிய வாதமும் அறிவியலும் ஒரிடத்தில் சந்திக்கின்றன என்றும், பாரதியின் பாடவில் விசிட்டாத் வைதம் பொதிந்து கிடக் கின்றது என்றும், திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங் கார், மணி வாசகப் பெருமான், தாயுமான அடிகள் இவர் கள் பாடல்களிலுள்ள அநுபவ அறிவில் அறிவியல் கருத்து கள் பொதிந்துள்ளன என்றும்,குழந்தையின் அழுகையிலுள்ள 45. திருவா, சிவ புராணம்-அடி 18