பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魏盘 அாய்மொழியும் வாசகமும் மேகம் போன்ற திருமேனியுடன் பெரிய பிராட்டியார் பூமிப் பிராட்டியாருடன் சேவை சாதித்தார். இவ்வாறு வழிப்பறி செய்யப்பட்ட வேதியர் ஆண்டாளை மணம் செய்து வந்த திருவரங்கப் பெருமானே என்று ஆழ்வார்களைப் பற்றிக் கூறும் திவ்வியசூரிசரிதம். குறிப்பிடுகின்றது. கலியனின் மாற்றம் : இங்கனம் யாதொரு காரணமும் பற்றாது கிடைத்த திருமந்திரத்தையும், அதற்கு உள்ளி டான சீமந் நாராயணனுடைய சொரூப ருட குண விபூதி சேஷ்டிதங்களையும் அருள்மாரி என்னும்படியான பெரிய இராட்டியாரின் அருளினாலே கண்டு அதுபவிக்கின்றார். தாமும் திருமங்கை யாழ்வாராகின்றார். இந்த அதுபவத் தின் விளைவாக, . வாடினேன்; வாடி, வருந்தினேன் மனத்தால்; பெருங் துயர் இடும்பையில் பிறந்து கூடினேன்; கூடி, இளையவர் தம்மொடு அவர்தரும் கலவியே கருதி ஓடினேன். ஒடி உய்வதோர் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் திரிந்து நாடினேன்; காடி கான்கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம், என்ற பாசுரம் அவர் திருவாயினின்றும் பிறக்கின்றது. இதைத் தொடர்ந்து பத்துப் பாசுரங்களால் முதல் திரு மொழி முற்றுப்பெறுகின்றது. - திருமக்திசம் பிறந்த வரலாறு : இந்தத் திருமந்திரம் பிறந்த வரலாற்றையும் நாம் இவ்விடத்தில் அறிந்து கொள்வது பொருத்தமாயிருக்கும். பாரோர் புகழும் எதசி' என்று மங்கை மன்னன் போற்றும் பதரிகாச்சிரமத்தில் தான் இந்த மந்திரம் பிறந்தது. இறைவனே ஆசாரியனா' கவும் சீடனாகவும் நின்று திருமந்திரத்தை உபதேசித்ததாக வரலாறு, வரலாறு இதுதான் சத்திய யுகத்தில் தர்ம