பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமங்கையாழ்வார் 蟹9 தேவனுக்கும் தட்சப் பிரஜாபதியின் மகளாகிய மூர்த்தி தேவிக்கும் நரன், நாராயணன் என்ற பெயர்களுடன் திரு மாலின் அவதாரங்களாகப் பிறந்தனர்.இவர்தம் குழந்தைப் பருவம் நைமிசாரணியத்தில் கழிந்தது; தவவாழ்க்கை கந்த மாதன பருவத்தில் தொடங்கியது. பிறகு தேவர்கள், முனிவர்கள், மக்கள் இவர்கட்குக் குரு-சிட முறையை நன்கு விளக்கும் பொருட்டுப் பதரிகாச்சிரமம் வருகின் றனர். இங்குத்தான் நாராயணன் நரனுக்குத் திருமந்தி ரத்தை உபதேசிக்கின்றான். இவர்கள் துவாபரயுகத்தில் கண்ணனாகவும் காண்டீபனாகவும் பிறக்கின்றனர். பகவத் கீதை என்று பாரோர் போற்றும் ஒப்பற்ற கிரந்தம் பிறப் பதற்கும் காரணமாகவும் அமைகின்றனர், வடகாட்டுத் திருத்தலப் பயணம் : திருமந்திரம் பிறந்த இடமாகிய வதாயை அநுபவிக்க வேண்டுமென்று பேரவாவால் திருமங்கையாழ்வார் வடநாட்டுத் திருத்தலப் பயனத்தை மேற்கொள்ளுகின்றார். வாள்வலியால் மாயோனிடம் மந்திரம் கொண்ட மகிழ்ச்சியால் ஆழ்வா ரிடம் அர்த்தபஞ்சக ஞானம் ஏற்படுகின்றது. பக்தி வெள் ளம் கரைபுரண்டோடுகின்றது. திருமந்திரப் பொருளின் எல்லை நிலமான திருத்தலங்களை அநுபவிக்க இழிகின் றார். எம்பெருமான் சர்வசுவாமி என்பதும், சர்வக லபன் என்பதும் திருமந்திரத்தின் தேர்ந்த பெண்ருளாகும். அடியவர்கள் இந்த உடம்புடன் அடிமை செய்து மகிழும் படிக்குப் பாங்காக எம்பெருமான் பல இடங்களிலும் கோயில் கொண்டு தன்னுடைய சுவாமித்துவத்தையும் செளி லப்பியத்தையும் விளங்கக் காட்டிக் கொண்டு நிற்கின்றான். ஆகவே, திவ்வியதேசங்கள் திருமந்திரப் பொருளுக்கு எல்லை நிலமாக அமைகின்றன. இத்தகைய திவ்விய தேசங்களை மற்றுமுள்ள ஆழ்வர்கள் அதுபவித்தார்களெ னிலும் திவ்வியதேச அதுபவத்தையே திருத்தலப் பயன் மாகக் கொண்டவர் இவ்வாழ்வார் ஒருவரேயாவார். இா ஆாகத்