பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வாய்மொழியும் வாசகமும் இங்ஙனமே நம்மாழ்வரும் திருநாங்கூர்த் திருப்பதிகளுக்கு எழுத்தருள வில்லை, அடுத்து, மலைநாட்டுத் திருப்பதிகளுள் திருநாவாய், திருமூழிக்களம் ஆகியவற்றைச் சேவித்து மங்களாசாசனம் செய்து கொண்டு திருத்தலப் பயணத்தையே தலைக் கட்டி விடுகின்றார். இங்கனமாக இந்த ஆழ்வார் 108 திவ்விய தேசங்களுள் 22 போக மிகுந்தவைகளை (86) மங்களாசா சனம் செய்தருளுகின்றார், அருளிச் செயல்கள் : இங்கனம் இந்த ஆழ்வார் மங்க கிளாசாசனம் செய்த அருளிச்செயல்களை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்து அடைவு படுத்தின நாதமுனிகள் (1) பெரிய திருமொழி, 2. திருக்குறுந்தாண் டகம், 3. திருநெடுந்தாண்டகம், திருவெழுக் கூற்றி ருக்கை, 8. சிறிய திருமடல், 6. பெரிய திருமடல் என்று ஆது பகுதிகளாக அடைவு படுத்தியுள்ளார். நம்மாழ்வார் அருளியுள்ள நான்கு திருமறைகளின் சாரமாகத் திகழும் 1. திருவிருத்தம், 2. திருவாசிரியம், 3. பெரிய திருவந் தாதி, 4. திருவாய்மொழி என்ற நான்கு பிரபந்தங் களுக்கும் ஆறு அங்கங்களாக இந்தப் பிரபந்தங்கள் அமைந் துள்ளனவாக வைணவர்கள் கருதுவர். இங்கு எண்கள் ஒற்றுமையேயன்றி பொருள் ஒற்றுமை இல்லை என்பதை நாம் உளங் கொள்ள வேண்டும். பொது இயல்புகள் : இந்த ஆழ்வாரின் அருளிச் செயல் களை மேலோட்டமாக நோக்கினாலும் சில பொது இயல் புகளை நாம் காண முடிகின்றது. பெரும்பாலும் இந்த ஆழ் வாரின் பாசுரங்கள் யாவும் அர்ச்சாவதார எம்பெருமான் களை மங்களாசாசனம் செய்தவை என்றாலும் விபவாவ தார எம்பெருமான்களின் திருக்குணங்களை எடுத்துக் கூறு. வனவாகவும் சில திருமொழிகள் அமைந்துள்ளன. இராமா வதாரத்தை இராட்சச பாவனையாலும், கிருட்டிணாவதா ரத்தை யசோதை பாவனையாலும், மற்றைய அவதாரங்