பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமங்கையர்ழில்ார் - - - - - - - - 8s திருநாங்கூர்த்திருப்பதிகள் எனப்படுபவை கோழிக்குச் கீழ்த்திசையில் சுமார் ஏழு கி. மீ. தொலைவில் அமைந் திருக்கும் பதினொரு திருப்பதிகளாகும். இவை யாவும் திருமங்கை நாட்டிலேயே அமைந்துள்ளன. மணிமாடக் கோயில் தொடங்கி வைகுந்த விண்ணகரம், அரிமேய விண் ணகரம், திருத்தேவனார் தொகை, வண்புருடோத்தமம், செம்பொன்செய் கோயில், திருத்தெற்றியம்பலம், திரு மணிக் கூடம், காவளம்பாடி, திருவெள்ளக்குளம் (அண்ணன் கோயில்) பார்த்தன் பள்ளி ஆகிய திருப்பதி களை யெல்லாம் சேவித்து மங்களாசாசனம் செய்கின்றார். இவை யாவும் சோழநாட்டைச் சேர்ந்தவையே, . இவற்றையடுத்து இந்தளூர், திலைச்சங்க நாண்மதியம், வெள்ளியங்குடி, புள்ளம்பூதங்குடி, திருக்கூடலூர், திரு வெள்ளறை, கோயில் எனப்படும் திருவரங்கம், கரம்பனுரர் (உத்தமர்கோயில்) திருப்பேர்க்கர் (அப்பக் குடத்தான் சந்நிதி), கோழி (உறையூர்), நந்தி புரவிண்ணகர் (நாதன் கோயில்), திருவிண்ணநகர் (ஒப்பிலியப்பன் சந்நிதி) , திருக் குடந்தை, தஞ்சைமாமணிக் கோயில், திருக்கண்டியூர், திரு நறையூர், திருச்சேறை, திருவழுந்துTர், சிறு புலியூர் சலசயனம், திருக்கண்ணமங்கை, திருக்கண்ணங்குடி, திரு நாகை ஆகிய திருப்பதிகளைச் சேவித்து மங்களா சாசனம் செய்துகொண்டு சோழநாட்டுத் திருத்தலப் பயணத்தை நிறைவு செய்கின்றார். பாண்டிகாட்டுத் திருப்பதிகள் : அடுத்து பாண்டி நாட்டுத்திருப்பதிகளைச் சேவிக்கத் திருவுள்ளம் பற்றுகின் றார். திருமெய்யம் தொடங்கி திருப்புல்லாணி, திருமா லிருஞ் சோலை, திருக்கோட்டியூர், மதுரைக் கூடல் (தென் மதுரை), திருமோகூர், திருத்தண்கால், திருக்குறுங்குடி ஆகிய திவ்விய தேசங்களை யெல்லாம் சேவித்து மங்களா சாசனம் செய்கின்றார். திருக்குருகூர் முதலிய நவதிருப்பதி களை ஏன் சேவிக்கவில்லை? இது ஒரு விளங்காப் புதிர்.