பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

葱懿 வாய்மொழியும் வாசகமும் பின் வாயில் இன்னுமாறு தந்து நிற்கின்றது-கல்கத்திா ரஸ்குல்லாவைத் தருவது போல மருதநிலக் காட்சிகள் : தென்னார்க்காடு, திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலுள்ள திவ்விய தேசங்கள்யாவும் நீர் வளம் நிலவளம் மிக்க மருத நிலச் சூழலில் அமைந்துள்ள" இத்திருத்தலங்கட்கு வருங்கால் திருமங்கையாழ்வார் மருத நிலக் காட்சிகளில் ஆழ்ங்கால் படுகின்றார். திருக்கோவ லுயிர்ச் சூழ்நிலையை, எழுந்த மலர்க் கருநீலம் இருந்தில் காட்ட இரும்புன்னை முத்தரும்பிச் செம்பொன் காட்ட செழுந்தட நீர்க்கமலம் தீவிகைபோல் காட்டும் திருக்கோவலூர் (பெ. தி. 2, 10:3) என்று காட்டுவார். இங்கு இதனை ஒரு பொற்கொல்லனின் பொற்களரியாக உருவகித்துக் காட்டுகின்றார். பொற்களரி யில் கரிகள் கொட்டப்பெற்று நிரம்பியிருக்கும்; பொன் களும் முத்துகளும் நிறைந்திருக்கும்; நெருப்பு செந்நிறக் டன் ஒளிர்ந்து கொண்டிருக்கும். இங்குக் கருநீல மலர்க்ள் கரித்துண்டுகளாகவும், புன்னை மொக்குகள் முத்தாகவும் புன்னைப் பூக்கள் பொன்னாகவும், தாமரைப் பூக்கள் நெருப்பாகவும் திகழ்ந்து தட்டானின் பொற்களரிபோல் கானப்பெறுகின்றது. . . திருநறை யூரின் நீர்வளத்தைக் குறிப்பிடும் பாசுரம் இது. பள்ளிக் கமலத் திடைப்பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி கள்ளி ஆடும் வயல் சூழ்ந்த கறையூர் (பெ.தி.6.7:6)

  • தாமரைப் பூவில் படுததுக் கொண்டிருந்த ஆண் நண்டின் முகத்தைப் பெண் நண்டு பார்த்து ஊடல் செய்யப் பெற்ற வயல் சூழ்ந்த நறையூர் என்பது இதன் நேர்பொருள்.