பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமங்கையாழ்வார் శ్రీ யானையை மகிழ்விக்க வேண்டி நெடுக ஒங்கி வளரும் மூங்கில் முளைகளைப் பெயர்த்தெடுத்து மலைமுழைஞ்சு களில் மிகுதியாகவுள்ள தேனில் தோய்த்து அதன் வாயில் ஊட்டுகின்றது (பெ. திரு. 1. 2: 5) இக்காட்சியில் நம் உள்ளம் தோய்ந்திருக்கும்போது திருமலையில் பூதத்தாழ் வார்காட்டும் காட்சி நினைவிற்கு வருகின்றது. . பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்னின்று இருங்கண் இளமூங்கில் வாங்கி, அருகிருந்த தேன்கலந்து கீட்டும் திருவேங்கடம் (இ. திரு. 75) என்ற பாசுரத்தில் இதனைக் கண்டு மகிழலாம். மதம் பிடித்து மனம்போனபடி திரியும் யானையொன்று தன் பேடையைக் காண்கின்றது. அத்னை மீறி அப்பால் செல்ல மாட்டாமல் அதற்கு இனிய உணவு கொடுத்துத் திருப்தி செய்ய விரும்புகின்றது. உடனே அருகிருந்த மூங்கிம் குருத்தொன்றைப் பிடுங்கி மலைக்குகையிலுள்ள ஒரு பெருந் தேன் கூட்டில் செருகிக் குலோப்ஜாமுன்போல் அதன் வாயில் ஊட்டுகின்றது. இந்தப் பாசுரம் முன்னே காட்டிய திருமங்கையாழ்வார் பாசுரத்திற்கு அடியெடுத்துக் கொடுத் திருக்கலாம் என்று கருத இடம் உண்டு. இந்த இரண்டு பாசுரங்களின் நினைவினால் கம்பநாடன் சித்திரகூடமலை யில் ஒர் அற்தபுக் காட்சியைப் படைத்துக் காட்டுவான். இங்கு ஆண்யானை யொன்று சூல்கொண்டுள்ள தன் இளம் பிடிமீது அளவற்ற அன்பு கொண்டுள்ளது. ஒருமலை இடுக் கில் ஒரு பெரிய தேன் கூடு உள்ளது. அதில் தேன் ததும்பி நிற்கின்றது. ஆண்யானை அண்மையிலுள்ள ஒருதழைக் கொத்தினை ஒடித்து அதனைக் கொண்டு அம்மழலை வண்டினங்களை ஒச்சுகின்றது. பிறகு அந்தத் தேன் கூட் டினை அப்படியே அசையாமல் தன் துதிக்கையினால் வாங்கி சூல் நிறைந்து உண்பதற்குச் சிரமப்படும் தன் பிடி