பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

嘉费 வாய்மொழியும் வாசகமும் அவனது திருக்குளம்பின் அகமண்டலத்தில் அடங்கி விட் டனவாம். ஒரு தண்டைச் சிலம்பில் மிகச் சிறிய பரல்கள் க ைகன வென்று ஒலிக்குமாப்போலே வராகநாயனாரின் திருக்குளம்பில் மேருமலை பரல்கள்போல் ஒடுங்கி ஒலித்த தாம். இப்படிப் பேருருவம் கொண்டு ஒரு பயில்வான் போல் நிற்கும்போது அகலகில்லேன் இறையும் என்று பிராட்டி இருக்கும் திருமார்பு குலுங்கிற்றாம். இந்தப் பேருருவத்தை நம் மனத்திரையில் அமைத்து மகிழ வேண்டும். பெரிய வடிவு கொண்டு உலகளந்த காலத்து மிக விசாலமான திருவடிக்குப் போதுமானதாக இருந்த பூமி வராகாவதார காலத்தில் எயிற்றின் துணியில் அடங்கா திருந்த விசித்திரத்தை எண்ணி மகிழ வேண்டும். இயற்கை வருணனை இந்த ஆழ்வார்தம் பாசுரங் சளில் காட்டும் இயற்கையின் அழகையும் பெருமையையும் சொல்லால் அடக்கிக் காட்ட இயலாது. எங்கங்கெல்லாம் அழகு உள்ளதோ அங்கங்கெல்லாம் இறைவனும் இருப்ப தாகக் கொள்வது தமிழரது கொள்கை. இக்கொள்கையை யொட்டியே ஆழ்வார்கள் இயற்கையில் தோய்ந்து இறைவனை அநுபவிக்கின்றனர். இத்தகைய இயற்கை அழகுகள் வாய்ந்த தலங்கள்தாம் திவ்விய தேசங்கள் என்றும், திருப்பதிகள் என்றும் மதித்து அங்குள்ள திருக் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான்களை வழிபடுவது முக்கியம் என்றும் கருதினர் பக்தர்கள். இப் போது திருமங்கையாழ்வார் காட்டும் நானிலவருணனை களைக் கண்டு மகிழ்வோம். - குறிஞ்சிகிலக் காட்சிகள் : குறிஞ்சி நில வருணனை யைப்பற்றிச் சிந்திக்கும்போது இமயமலை, சிங்கவேள் குன்றம், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலைமலை என்ற மலைத்திருப்பதிகள் நம் நினைவுக்கு வருகின்றன. திருப்பிரிதி (இமயமலையில்)யில் ஒரு காட்சி: இங்கு ஆண்யானை யொன்று தன் காதலியாகிய இளம்பெண்