பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமங்கையாழ்வார். 萄曾 எம்பெருமானின் மற்றொரு திருவடி அண்டத்திற்கு அப்பால் போவதாகக் கிளம்பி அதற்கு மேலேயும் ஆதித்திய பதம், சந்திரபதம், நட்சத்திரபதம் ஆகியவற்றிற்கு அப்பாலும் கடந்து செல்வதாயிற்று. ஆக, இரண்டு திருவடி களாலும் மண் முழுவதையும் அகப்படுத்திக் கொண்டான். திருவடிகளின் அளவுகளைக் கூறி அவனுடைய அளவைக் காண்வதற்கு நமது மனத்தின் கற்பனைக்கு அளவிட்விட்டு விடுகின்றார் ஆழ்வார். விண்வெளி முழுவதும் அவனது திருமேனி விரிந்து பெருகி வளர்ந்திருக்க வேண்டும் என்று மானசீகமாகக் காண்கின்றோம், . எம் பெருமானின் வராக அவதாரக் காட்சியை, சிலம்பின் இடைச் சிறுபரல்போல் பெரிய மேரு திருக்குளம்பில் கணகணப்ப, திரு ஆகாரம் குலுங்க, கில மடங்தைதனை இடங்து புலகி கோட்டிடைவைத் தருளியளங் கோமான் - . -பெரி-திரு. 4.4:3 என்பது காட்டுவார். இக்காட்சிக்கு விரிவுரைபோல் இன்னொரு காட்கியை, . . தீதறு திங்கள்பொங்கு சுடரும்பர் உம்பர் உலகேழி னோடு முடனே மாதிர மண்சு மந்து வடகுன்று கின்ற மலையாறும் ஏழுகடலும், பாதமர் சூழ்கு ளம்பி னகமண்டலத்தி னொருபா லொடுங்க வளர்சேர் ஆதிமுன் ஏன மாகி அரணாய மூர்த்தி - . . . . -டிெ 11-4:3 என்ற பாசுரத்தால் காட்டுவார். . . . . எம்பெருமான் பேருருவம் கொண்ட வராகமூர்த்தி யாய்த் தோன்றிய பொழுது திங்கள், கதிரவன், தேவர்கள் மேலுலகங்கள், திசைகள், மேருமலை, ஆறுகுல பர்வதங்கள்