பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வாருங்கள் பார்க்கலாம் நூலே வெளி வந்தால் நன்றக இருக்கும் என்று ஆசைப்பட்டாள். அந்த ஆசையையே அப்படித் தெரிவித்தாள். அவள் கூறியது காதில் விழுந்தவுடன் அந்த அன்பர் திரும்பிப் பார்த்தார். உடனே அவர், 'அந்தாதிக்குக் காப்பாக்கினுல் அரசனுக்கு வரி யாகுமா ?” என்று ஒரு கேள்வி கேட்டார். அந்தப் பெண்மணிக்கு ஒன்றும் விளங்கவில்லை. சிறிது யோசித்த பிறகு அருகில் நின்றவர்களே விசாரித்தாள். உண்மை தெரியவந்தது. தொண்டை நாட்டில் நெற்குன்றம் என்ற ஊரில் கள்ப்பாளர் வமிசத்தில் உதித்தவர் அவர். நெற்குன்ற வாணர் என்னும் பெயருடையவர். பெரிய வள்ளல். பஞ்சம் வந்தமையால் அவர் அரசனுக்கு உரிய வரியைச் செலுத்த முடியாமற் போயிற்று. தம் ஊரில் 'வருவோரைப் பாதுகாக்க இயலாத நிலையில் இருப் பதைவிடத் தல யாத்திரை செய்து வரலாம் என்று புறப்பட்டார். திருப்புகலூருக்கு வ ரும் போது அரசனுடைய ஏவலாளர்கள் வரிகொடாமையால் அவரைப் பற்றிக் கொண்டனர். நீராடிச் சுவாமி தரிசனம் செய்துகொண்டு வருகிறேன்” என்று நெற் குன்றவாணர் சொல்ல, அவர்கள் அதற்குச் சம்மதித் தார்கள். அவர் நீராடிச் சுவாமி தரிசனம் செய்யத் தொடங்கி முதலில் திருக்கோயிலுக்கு வெளியே உள்ள ஞான விநாயகர் ஆலயத்தை அடைந்து வழி பட்டார். அப்போது நிகழ்ந்த செய்தியே மேலே சொன்னது. - அந்த ஊரில் சிந்தாமணி என்னும் பெயருடைய தாசி ஒருத்தி இருந்தாள். அவள் திருப்புகலூர்ச்