பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகலூர் மேவிய புண்ணியன் 37 சிவபெருமானுடைய கோயிலைச் சார்ந்த ருத்திர கணிகையரில் ஒருத்தி. பொருட் செல்வமும் கல்விச் செல்வமும் நிரம்பப் பெற்றவள். சிவபக்தியிலும் சிறந்தவள். நெற்குன்றவான முதலியார் பாடலைப் பாடும்போது வந்து கேட்டவள் அவள்தான். சிந்தாமணி .ெ ந ற்கு ன் ற வாணருடைய வரலாற்றை அறிந்து மிகவும் மனம் இரங்கி, 'இறைவனைப் பாடினல் பொன்னும் கிடைக்கும்; புகழும் கிடைக்கும். புகலூர்ப் பெருமான் சுந்தர மூர்த்தி நாயனருக்குப் பொன் அளித்தவராயிற்றே. நீங்கள் இறுக்க வேண்டிய வரியை அவர் அளித் தருள்வார். அந்தாதியைப் பாடுங்கள்’ என்று சொன்னுள். ஏவலாளரை நோக்கி, ‘அவர் அளிக்க வேண்டிய வரிப்பணத்தை இதோ நான் தருகிறேன்’ என்று சொல்லி அவ்வாறே கொடுத்து விட்டாள். அவளுடைய அன்பைக் கண்டு வியந்த நெற் குன்றவாணர் அத்தலத்தில் சில நாள் இருந்து நூறு பாடல்கள் அடங்கிய அந்தாதி ஒன்றை இயற்றினர். அதற்குத் "திருப்புகலூர் அந்தாதி” என்று பெயர். இறைவனுடைய திருவருளால் தமக்கு உண்டான துன்பம் நீங்கியதனுல் நெற்குன்ற வாணருக்குத் திருப் புகலூரில் மிக்க அன்பும் சிந்தாமணியென்னும் தளிப் பெண்டினிடம் நன்றியறிவும் உண்டாயின. அவர் தம் ஊர் சென்றடைந்தார். பஞ்சம் நீங்கி மீட்டும் வளம் உண்டான காலத்தில் அவர் திருப்புகலூரில் திருக்குளத்தின் தென்கரையில் ஓர் அன்னசத்திரம் நிறுவி அதில் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு அந்த ணர்கள் உண்ணும்படியாக நிவந்தம் அமைத்தார்.