பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வாருங்கள் பார்க்கலாம் இவ்வூர்க் கோயிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில், "நம்பியார் குளத்தின் தென்கரையிலே நிசதம் பன்னி ரண்டு பிராமணர் உண்பதாக ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்துப் பேரூர் நாட்டு நெற்குன்றத்து நெற்குன்றங்கிழார் அரயன் கருவு ணுயகரான களப்பாள ராஜா செய்வித்த சாலை” என்ற குறிப்புக் காணப்படுகிறது. - சிந்தாமணியென்னும் கணிகை முடிகொண் டான் ஆற்றுக்கு அக்கரையில் ஒரு பெரிய மாளிகை கட்டிக் கொண்டு வாழ்ந்தாள். அதில் கூடமும் கோபுரமும் இருந்தன. அக்காலத்தில் இப்பக்கத்தில் இருந்த அரசன் ஒருநாள் அவ்வழியே சென்ற்போது அவள் மாளிகையைக் கோயில் என்று நினைத்துக் கையெடுத்துக் கும்பிட்டான். அப்போது அருகில் இருந்த ஒருவர், அது தாசி வீடு' என்று சொன்னுர். அதைக் கேட்ட மன்னனுக்குக் கோபம் வந்து விட்டது. "தன் வீட்டைக் கோயில் போலவா அவள் கட்டியிருக்கிருள் ? அந்த வீட்டை இடித்து விடுங்கள்’ என்று கட்டளையிட்டான். அரசனுடைய ஆணையை மறுப்பவர் யார்? ஏவலாளர்கள் சிந்தாமணியின் மாளிகையை இடிக்கச் சென்ார்கள். செய்தியை அறிந்த அவள் மன்னனே அணுகி வணங்கி, ‘அடியேன் ஒரு விண்ணப்பம் செய்துகொள்ள விரும்புகிறேன்’ என்ருள். "உன் வீட்டை இடிக்கத்தான் வேண்டும்’ என்று கடுமையாகக் கூறினன் அரசன், - "தேவரீருடைய ஆணையை மறுக்க அடியேன் இங்கு வரவில்லை. என் மாளிகையை இடிப்பதைத் தடுக்கப் போவதில்லை.”.