பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகலூர் மேவிய புண்ணியன் $9. பின்பு என்ன சொல்ல வேண்டுமென்று இங்கே வந்தாய் ?” - - "என் வீட்டை நானே இடித்துக் கொள் கிறேன்.” - அதில் என்ன லாபம் ? "அரசருடை ய கோபத்துக்கு ஆளான அடிமை அரசருடைய ஏவலாளருக்கு வேலை கொடுப்பது அடாது. அதைக் கட்டுவித்த நானே இடித்து விடு கிறேன். இடிக்கும் பொருளேக்கொண்டு அடியேன் இந்தத் திருக்கோயிலுக்கு ஒரு மதிலக் கட்டலா மென்று எண்ணுகிறேன்” என்ருள் சிந்தாமணி, அரசன் அவள் விருப்பத்துக்கு இணங்கினுன். அவள் தன் மாளிகையை இடித்து அந்தச் செங் கல்லேக் கொண்டு திருக்கோயிலுக்குப் புற மதிலேக் கட்டுவித்தாள். வெளிப் பிராகாரத்தில் ஒரு மண்ட பத்தையும் அதற்கு அருகே ஒரு சிவாலயத்தையும் நிறுவினுள். அந்த மண்டபத்துக்குச் சிந்தாமணி மண்டபம் என்றும், ஆலயத்துக்குச் சிந்தாமணிசர் ஆலயம் என்றும் பெயர்கள் வழங்குகின்றன. 2 அப்பர் சுவாமிகள் முத்தி பெற்ற தலம் திருப் புகலூர். அது நன்னிலம் ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கிழக்கே நான்கு மைல் தூரத்தில் இருக்கிறது. அப்பர் சுவாமிகள் பிறந்த தலமாகிய திருவாமூரையும் அருள் பெற்றதாகிய திருவதி ைகயையும் பார்த்து அந்த அந் தத்தலத்துச் செய்திகளையும் கே ட் டு த் தெரிந்து கொண்ட பிறகு, அவர் முத்தியடைந்த தலமாகிய திருப்புகலூரையும் தரிசிக்க வேண்டும் என்ற அவா