பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 வாருங் ள் பார்க்கலாம் வோடு அவ்வூருக்குப் போனேன். முன்பே ஒரு முறை. இந்தத் தலததுக்குப் போயிருக்கிறேன். ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளாகிய ஜகத்குரு ரீ சங்க ராசார்ய சுவாமிகள் அவர்கள் ஆணைப்படி அப்போது, ஒரு மாநாட்டுக்குத் தலைமை தாங்கச் சென்றிருந் தேன். அப்போது ஆசாரிய சுவாமிகள் பேரருள் கூர்ந்து எளியேனுக்கு “வாகீச கலாநிதி' என்ற பட்டததை வழங்கியருளினர்கள். அந்தத் தலத்தைப் பின்னும் நன்ருகத் தரிசித்து வரலாறுகளையும் அறிந்து வரலாம் என்று மீண்டும் சென்றேன். அப்போது மேலே சொன்ன வரலாறு களே அங்கே கேட்டேன். திருப்புகலூர் அந்தாதி தோன்றிய வரலாற்றை என்னுடைய ஆசிரியப் பிரானுகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர் களும் சொல்லியிருக்கிருர்கள். கோயிலின் கோபுரம் நெடுந்துாரத்தில் வரும் போதே நம்மை வா வா என்று அழைக்கிறது. கோயிலேச் சுற்றிலும் ஓர் அகழி இருக்கிறது. கோயிலேச் சூழ மூன்று புறங்களிலும் . இந்த அகழியைக் காணலாம். ஒரு காலத்தில் நான்கு புறத்திலும் இந்த அகழி இருந்ததாகவும், பின்பு ஒரு புறத்தைத் தூர்த்து மக்கள் எளிதிலே போய் வரும் படி வழி அமைத்ததாகவும் சொ ன ர்ைகள். ஊரினுடைய பேர் திருப்புகலூர். சரண்யபுரி என்று வடமொழியில் அதைப் பெயர்த்துச் சொல் கிருர்கள். இறைவன் இறப்புக்கும் பிறப்புக்கும் அஞ்சிச் சரண் அடைந்தவர்களுக்குப் புகலாக விளங்குகிருன். அவன் எழுந்தருளியிருக்கும் தலம்