பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புகலூர் மேவிய புண்ணியன் 9|| உயிர்களுக்குப்புகலிடமாக விளங்குகிறது. ஆதலின் திருப்புகலூர் என்ற பெயர் மிகப் பொருத்தமானது தான் என்று முதலில் எனக்குத் தோன்றியது. அந்த எண்ணம் அப்படியே நின்றுவிடுகிறதா ? எசையும் துரண்டித் துருவி ஆராய வேண்டும் என்று தினவு சில சமயங்களில் உண்டாகிறதல்லவா ? எல்லா ஊரும் புகலூர் தானே ? இதற்கு மாத்திரம் அந்தப் பேர் வருவானேன் ?' என்ற கேள்வியை என் அறிவு கேட்டது. யாராவது ஆபத்துக் காலத்தில் இந்த இடத்தில் வந்து மறைந்து வாழ்ந்திருக்க வேண்டும். தம்மை ஒருவரும் எளிதில் அணுகாதபடி அகழியை வெட்டிக்கொண்டு கோயிலுக்குள் பதுங்கியிருக்க வேண்டும் என்று என் கற்பனை வேலை செய்தது. "இந்த அகழிக்கு என்ன பேர் ? யார் வெட்டி ஞர்கள் ?’ என்று ஆலயக் குருக்களில் ஒருவரும் முதியவருமாகிய ரீ குப்புசாமி குருக்களவர்களைக் கேட்டேன். “இதற்கு அக்கிணிதீர்த்தம் என்றும் பாணதீர்த்தம் என்றும் இரண்டு பேர்கள் உண்டு. இதைப் பாணுசுரன் தன் கதையால் உண்டாக்கினன் என்று தலமாகாத்மியம் சொல்கிறது.' "அந்த மாகாத்மியம் தமிழில் இருக்கிறதா? வடமொழியில் இருக்கிறதா?” “சரண்யபுர மாகாத்மியம் என்று சம்ஸ்கிருதத் தில் இருக்கிறது. பன்னிரண்டு அத்தியாயங்கள் உள்ள கிரந்தம்.” "பாணுகரன் கதையால் அகழியை உண் டாக்கிய க்தைன்ன்ன?