பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வாருங்கள் பார்க்கலாம் தெரியும். அவர் காதில், “சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன்’ என்ற சொற்கள் விழுந்ததும் அவ ருடைய கற்பனை வேலை செய்யத் தொடங்கியது. புகலூர்ப் புண்ணியனேச் சிங்க உருவம் எடுக்கச் செய்தார். அப்பர் சவாமிகளை விழுங்குவதாக அவர் கற்பனை ஓடியது. ஒரு கதையைக் கட்டி விட்டார். அதைப் பரப்பியதோடு, 'சிங்கமே உன்னடிக்கே போதுகின்றேன்” என்பதையே ஆதார மாகக் காட்டினர். எதையும் நம்பும் சில அப்பாவி கள் அந்தக் கதையை நம்பினர்கள். தம்மால் ஆன கைங்கரியத்தைச் செய்யத்தொடங்கிப் பிறர் காதிலும் இதைப் போட்டு வைத்தார்கள். கதை இதுதான். அப்பர் சுவாமிகள் இந்தப் பதிகத்தைப் பாடினவுடன் சிவபிரான் சிங்க உருவம் எடுத்து அப்பரை விழுங்கினன். அப்போது அப்பர், வலிக்குதே' என்ருராம். சிங்கம், இனிக்குதே! என்று விழுங்கியதாம். இந்தக் கசக்கும் கதையைச் சொல்லிவிட்டு, அப்பர் சுவாமிகள் உடம்பையும் இறைவன் எடுத்துக்கொண்டான். அதளுல்தான் அவருக்கு இங்கே சமாதி ஒன்றும் இல்லை” என்று தம் ஆராய்ச்சித் திறத்தைக் காட்டுகிறவர்களும் இருக் கிருர்கள். மற்ற நாயன்மார்களுடைய சமாதிகளைக் கண்டு பிடித்து நிலநாட்டிவிட்டு, இங்கே அப்படிச் செய்ய வகையில்லாமல், ஆராய்ச்சி செய்து உண்மையைக் கண்டு பிடித்தவர்கள் போல அவர் கள் பேசுகிருர்கள் ! சொல்லிலே இந்தப் பொய்க் கதையைச் சொல் வது போதாதென்று கல்லிலேயும் இதை வெட்டி