பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்காலக் கடவுள் #01. உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் காலத் துள்ளும் இடத்துள்ளும் அடங்கி நிற்பவை; காலதேச பரிச்சின்னம் உடையவை. அறிவினுல் மற்றவற்றின் எல்லேயை ஒருவாறு நாம் ஊகித்து அறியக்கூடும். ஆளுல் காலம் எப்போது தோன்றியது, எப்போது முடியப் போகிறது என்பதை நினைக்கும்போது அறிவு மயங்கும். அப்படியே இடம் எங்கே முடிகிறது என் பதைச் சிந்திக்கப் புகுந்தாலும் அறிவு முடிவு காணு மல் நின்றுவிடும். உலகத்துப் பொருள்களே அடக்கி நிற்கும். காலமும் இடமும் எல்லையற்றவைபோல நமக்குத் தோன்றுகின்றன. ஆளுல் அவை எல்லே இல்லாதவைதாமா? வீட்டுக்குள்ளே இருப்பவன் அந்த வீட்டின் புற எல்லேயைக் காண முடியாது. வீட்டுக்கு வெளியே நின்று பார்த்தால் அந்த எல்லே தெரியும். அப்படியே, காலம், இடம் என்ற இரண்டுக்கும் அப்பாற்பட்டு நின்ருல் அந்த இரண்டின் எல்லேயையும் உணர்ந்து கொள்ளலாம். அவ்விரண்டையும் கடந்து நிற்பது ஒருபொருள். அதுதான் பரம்பொருளாகிய இறைவன். கால எல்லேயையும் இட எல்லையையும் கடந்து இறைவளுேடு ஒன்றுவதையே முக்தி என்று சொல் இறைவன் காலமும் இடமும் கடந்தவன் என்றது, அவற்றிற்குள்ளே அடங்காமல் வழித்து நிற் பவன் என்பதைக் குறிக்கும். அவன் காலமாகவே விளங்குகிருன். ஞாலமே பிறவே அவை வந்து போம் காலமே' என்று மாணிக்கவாசகர் பாடுகிருர். காலத்தை இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் என்று மூன்ருகப் பிரித்துப் பார்க்கிருேம்.