பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூக்கலைக் கடவுள் 1s? j காலத்தையும் தனித்தனியே குறிக்கும் சந்நிதிகள் இருக்கின்றன. - திருப்புகலூர்த் தேவஸ்தானம் அக்கினரீசுவர ருடைய திருநாமத்தால் வழங்குகிறது. அப்பெரு மானே கோயிலின் பிரதான மூர்த்தி. அம்மூர்த்திக் குரிய அம்பிகை கருந்தாழ் குழலி அல்லது சூளிகாம் பிகை. அப்பிராட்டியின் திருக்கோயில் முதல் பிராகா ரத்தில் வடக்கே இருக்கிறது. உற்சவ விக்கிரகம் அழகாக இருக்கிறது. - கிழக்கு நோக்கிய சந்நிதியை உடைய அக்கினி சுவரருக்குப் பக்கத்தில் அதனை ஒட்டி வடக்கே மற் ருெரு சந்நிதி இருக்கிறது. வெளியிலிருந்து பார்த் தால் இரண்டு சந்நிதிகளின் விமானங்களும் அடுத் தடுத்துத் தோன்றும். வடக்கே உள்ளது வர்த்த மானேசுவரர் சந்நிதி, வர்த்தமானம் என்பது நிகழ் காலத்தைக் குறிக்கும் வட சொல். நிகழ்காலமாக நிலவும் பெருமான் என்ருே, நிகழ்காலத்தை நிகழ்த் தும் இறைவன் என்ருே, நிகழ்காலத்துக்குத் தலைவன் என்ருே அத்தொடருக்குப் பொருள் செய்து கொள்ள லாம். ஆலயத்தில் இரண்டாம் பிராகாரத்தைச் சுற்றி வந்தால் தென்மேற்கு மூலையில் பூதேசுவரர் திருக் கோயிலேக் காணலாம்; கிழக்குப் பார்த்த சந்நிதி. இறந்த காலக் கடவுள் அவர் இன்னும் காட்சியளித் துக் கொண்டிருக்கிருர், பிராகாரத்தின் வடக்குப் பக்கத்தில் தலவிருட்சமாகிய புன்னே நிற்கிறது. அது மிகப் பழைய மரம். அதன் எதிரே மேற்கு நோக்கிய ச ந் நி தி யி ல் பவிஷ்யேசுவரராகிய எதிர்காலத்து இறைவர் எழுந்தருளியிருக்கிருர். இவர் இருவருக்கும்