பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 வாருங்கன் பார்க்கலாம் இடையேதான் நிகழ்கால்நாயகர் நிலவுகிருர். வரிசை யாகப் பார்த்தால் பூதேசுவரரும் வர்த்தமானே சுவரரும் பவிஷ்யேசுவரரும் வீற்றிருப்பது தோன்றும். இந்த மூன்று சந்நிதிகளிலும் வர்த்தமானேசுவரர் சந்நிதிக்குத்தான் இங்கே சிறப்பு. அந்தச் சந்நிதி பிரதானமான அக்கினிசுவரர் சந்நிதியோடு ஒட்டி யிருக்கிறது. மற்ற இரண்டு இறைவர்களும் சக்தி யின்றி-அம்பிகை இல்லாமல்-இருக்கிருர்கள். வர்த் தமானேசுவரர் சந்நிதியில் தெற்கு நோக்கியபடி மனேன்மணியம்மை எழுந்தருளியிருக்கிருள். வர்த்தமானேசுவரர் சிறப்பு அதோடு நிற்க வில்லை. திருப்புகலூர்க் கோணப்பிரானுகிய அக்கினி சுவரரை மூவரும் பாடியிருக்கிருர்கள். வர்த்தமானே சுவரரும் தேவாரப் பாடல் பெற்றவர். திருஞான சம்பந்த சுவாமிகள் ஒரு திருப்பதிகம் பாடியிருக்கிருர், இந்தச் சந்நிதியில் ஒர் அடியவருடைய திருவுருவம் இருக்கிறது. திருஞான சம்பந்தர் காலத்தில் வாழ்ந்த முருக நாயனுர் அவர். அவருக்கு நிகழ்காலப் பிரானி டம் ஈடுபாடு அதிகம். அவர் ஆதிசைவர் என்று தெரிகிறது. அவர் முப்போதும் வர்த்தமானேசுவரரின் திருமேனி தீண்டி வழிபாடு ஆற்றி வந்தார். மலரைத் தொகுத்து இறைவருக்குச் சாத்தும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார். இதைத் திருஞான சம்பந்தர் சிறப்பிக்கிருர். ஈசன் எதமர் கடவுன் இன்னமூது எங்தைளம் பெருமான் பூசும் காசில்வெண் ணிற்றர் - பொலிவுடைப் பூம்புகலூரில்