பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்காலக் கடவுள் 105 மூக வண்டுஅறை கொன்றை முருகமுைப் போதும் செய் முடிமேல் வச8 :னடிகர் உடையார் வர்த்தமா கணிச்சரத் தாரே. முருக நாயனுர் இந்த ஊரிலே பிறந்து வாழ்ந்த வர். அவர் ஒரு திருமடம் கட்டிக்கொண்டு வாழ்ந் தார். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், திரு நீலநக்கர், சிறுத்தொண்டர் ஆகியவர் வந்து அதில் தங்கினர்கள். இங்கே உள்ள கல்வெட்டு ஒன்றில் “நம்பி முருகன் திருமடம்' என்று ஒரு மடம் இங்கே இருந்த செய்தி வருகிறது, நம்பி என்பது ஆதி சைவரைக் குறிப்பது. அதுவே முருக நாயனரின் மிடம் என்று தோன்றுகிறது. அப்பர் சுவாமிகள் வாழ்ந்திருந்த மடம் ஒன்றும் இவ்வூரில் மேல் வீதியில் இருக்கிறது. அது பொலி வழிந்து கிடக்கிறது. அதைப் பரிபாலிக்கத் தனியே நிலங்கள் உண்டென்று சொன்ஞர்கள். 影 முதற் பிராகாரத்திலிருந்து இரண்டாம் பிராகாரத் துக்குச் செல்லும் இடைகழி ஒன்று உண்டு. அதன் மேல் இடைநிலைக் கோபுரம் நிற்கிறது. அந்த இடை கழியில் தென் புறத்தில் அதிகார நந்தி எழுந்தருளி யிருக்கிருர். அவருக்கு அருகில் அவருடைய தேவி யார் இருக்கிரும். - "தேவியாருக்குப் பெயர் ஏதாவது உண்டோ ?” என்று குருக்களைக் கேட்டேன். தெரியாது' என்ற

  • હક வண்டு- மொய்க்கும் வண்டு. முப்போதும் செய்முப்போதும் வழிபாடு செய்யும்.