பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#06 வாருங்கள் பார்க்கலாம் விடையைத்தான் எதிர் பார்த்தேன். அவரோ, “ஜ்வாலா கேசி என்று உடனே விடை கூறிஞர். அந்தப் பெயர் எந்தப் புராணத்தில் இருக்கிறதோ, தேடியல்லவா கண்டுபிடிக்க வேண்டும் ? இரண்டாம் பிராகாரத்தில்தான் பல மூர்த்திகள் எழுந்தருளி யிருக்கிருர்கள். பிராகாரத்துக்குள் நுழைந்தவுடன் தெற்குப் பக்கத்தில் அக்கினியின் மூல உருவமும் உற்சவ மூர்த்தியும் இருப்பதைக் காணலாம். அக்கினிபகவான் பூசித்த இடமாதலின் அவருக்கு ஒரு நாள் உற்சவத்தில் சிறப்பு உண்டு ; அன்று அவர் எழுந்தருளுவார். பிராகாரத்தின் தெற் குத் திருமாளிகைப் பத்தியில் உற்சவவிக்கிரகங்களும் மூலவிக்கிரகங்களுமாகப் பல மூர்த்திகள் எழுந்தருளி யிருக்கின்றனர். இந்தத் தல வரலாற்ருேடு தொடர் புடைய வாணுசுரன், அவன் தாய் மாதலி, போக சித்தர், கந்தமாதனர் முதலியோருடைய திருவுருவங் கள் இங்கே வழிபடப் பெறுகின்றன. கர்ப்பக் கிருகத்தின் தெற்கே ஒரு பலகளிை இருக்கிறது. இரண்டாம் பிராகாரத்தில் வலம் வரும் போது இந்தப் பலகணியைப் பார்க்கலாம். இது தென்றல் வாசல் என்று வழங்கும். திருவாரூரில் இப் படி ஒன்று உண்டு. தென்றல் வாசலுக்கருகில் காற்று வாங்கிக்கொண்டு ஒரு பிள்ளையார் உட்கார்ந்து கொண்டிருக்கிருர். . i தெற்குப் பிராகாரத்தில் மேற்குப் பக்கத்தில்தான் மூன்னே சொன்ன பூதேசுவரர் சந்நிதி இருக்கிறது. அவருக்குப் பின்னுல் வாதாபி கணபதி, அப்பர் சுவாமிகள், திரிமுக சங்கார மூர்த்தி என்னும் மூவர்