பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘108 வாருங்கள் பார்க்கலாம் பறவை முகமும் படைத்திருந்தான். அந்தத் திரி, முகாசுரன் ஒருவன் அல்ல. உலகத்து மக்கள் யாவ' ருமே திரிமுகாசுரர்கள்தாம். உடம்பு, உள்ளம், உரை. என்ற மூன்று கரணங்களேயும் கொண்டு நாம் செயல் செய்கிருேம். உடம்பால் மனிதராக இருக்கிருேம். உரையினுல் வானத்தையளந்து பேசிப் பறவையாக இருக்கிருேம். உள்ளத்தாலோ தூய்மையற்ற சிந்தனை களே எழுப்புகிருேம் அழுக்கில் அளேயும் பன்றியைப் போன்ற நிலை அது. மொத்தத்தில் நாம் அசுரனைப் போல நல்லவர்களுக்குத் தீங்கு இழைக்கிருேம். இறைவன் திருவருள் கிடைத்தால் இப்படி ஒடியாடித் திரியும் நிலை மாறிப் பசுமை கொழிக்கும் மரத்தைப் போல, அன்பு கொழிக்க, அவன் சந்நிதியில் நின்ற நிலையினின்றும் மாருமல் இருக்கலாம். இப்படிப் பொருள் செய்தால், அத்தக் கதை எவ்வளவு அருமையானதாகத் தோன்றுகிறது! - இந்தத் தலத்துக்கு வடாரண்யம், சம்பகாரண் யம், புன்னகவனம் என்று மூன்று பெயர்கள் உண் டாம். கல்லால், சண்பகம், புன்னே என்ற மூன்றும் இந்தத் தலத்துக்குரிய தலவிருட்சங்கள் என்று குருக் கள் சொன்னர். புன்னைமரம் வடக்குப் பிராகாரத்தில் பவிஷ்யேசுவரர் சந்நிதிக்கு எதிரில் நிற்கிறது. இந்தக் கோயிலில் சந்திரசேகர மூர்த்தி சிறப்புப் பெற்றவர். திருத்தேரில் எழுந்தருளும் பெருமான் அவரே. அக்கினிக்கு எதிரே அவர் சந்நிதி இருக் கிறது. பிரமன் இத் தலத்தில் பூசித்துப் பேறுபெற் ருன். அவனுடைய திருவுருவம் ஒன்று மிக அழகிய கோலத்துடன் இருக்கிறது. தாமரை மலர்மேல் வீற்