பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூக் காலக் கடவுள் - #1 H பழங்காலத்தில் தேவாரப் பதிகங்களே முறை யாக இங்குள்ள இறைவன் சந்நிதியில் சிலர் பாடினுர் கள். அவ்வாறு 'திருப்பதியம் விண்ணப்பஞ் செய் வாருக்கு முற்றுாட்டாக அரசர்கள் நிலம் வழங்கி யிருந்தார்கள். இந்தச் செய்தியை ஒரு கல்வெட்டுத் தெரிவிக்கிறது. திருப்புகலுருக்குச் சென்று ஆலயத்தை நிதான மாகத் தரிசித்துக்கொண்டு அதன் சம்பந்தமான பல செய்திகளையும் தொகுத்துக் கொண்டேன். காவியத் ಶ್ದಿ ஒவியத்திலும், சிற்பத்திலும் ஆலயத்திலும், தாத்திரத்திலும் சாத்திரத்திலும், அறி வி லும் உணர்ச்சியிலும், அகத்திலும் புறத்திலும் பல பல வகையில் இணேந்து விரிந்து விளங்கும் கடவுள் உணர்வைத் தமிழர்கள் எப்படி யெல்லாம் பாதுகாத் தார்கள் என்பதை எண்ணும்போது பெருமிதமும் அடுத்து இரக்கமும் உண்டாயின; திருப்புகலூர், மூன்று காலமுமாகி நிற்கிருன் கடவுள் என்ற உண் மையைப் புலப்படுத்தும் தலம் என்பது உள்ளத்தில் அழுத்தமாக நிலவியது. கெழு:ஃபைாய் இன்ருகி நாளே யாகி என்ற தேவாரப் பகுதி இன்னும் நெஞ்சிலே சுருதி போடுகிறது.