பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 வாருங்கள் பார்க்கலாம் வன், இங்கே பிறந்திருக்கிருன். அவன் முகத்தில் ராஜகளே யல்லவா சொட்டுகிறது?" என்று முதியவர் கள் கூறக் கேட்டு, ஆரூரனுடைய தாயார் இசை ஞானியார் உள்ளம் குளிர்ந்து பெருமிதம் அடைவார். ஒருநாள் நரசிங்க முனையரையர் தம்முடைய விருப்பத்தை மெல்லச் சடையனரிடம் வெளியிட் டார். '"நான் சொல்வதைத் தாங்கள் தவருக எண் ணக்கூடாது. தங்களுடைய மகனிடம் எனக்கு உள்ள அன்பு இந்தப் பிறவியிலே உண்டானதென்று சொல்வதற்கில்லே. முன் பிறவிகளில் இருந்த உறவு தான் இந்த அன்புக்குக் காரணம் என்று நினைக்கி றேன். இவனே என்னுடன் சில காலம் இருக்கும் படி செய்தால் எனக்குப் பெரிய வரம் தந்ததாகக் கொள்வேன். இங்கே வந்துவிட்டு ஊருக்குப் போளுல் இரண்டு மூன்று நாள் சரியானபடி தூக்கமே வருகிறதில்லை. இவன் நினைவாகவே இருக்கிறது. என் மனைவியையும் அன்று கூட்டி வந்தேன். அவ ளும் இவனைப் பார்த்தது முதல் இவனிடம் அன்பு கொண்டு விட்டாள். குழந்தையை நான் நல்ல முறையில் பாதுகாத்து வருவேன். அதில் தங்களுக் குச் சிறிதும் ஐயமே வேண்டாம்.” சடையனர் முதலில் சற்றே திகைத்துப் போனர். அரசருக்கும் தம்மகனுக்கும் உள்ள அன்புப் பிணைப்பு. மிக வலியதென்று அவர் தெரிந்து கொண்டிருந் தாலும் இந்த அளவுக்கு முற்றியிருக்கும் என்று எண் ணவில்லை. "மன்னர்பிரான் விருப்பத்தை மறுக்க நான் யார்? அவனுக்கு இன்னும் உபநயனம் செய்ய, வில்லை. மரபுக்கு ஏற்றபடி அத்தியயனம் ஆகவேண், டும்” என்ருர், -