பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 வாருங்கன் பார்க்கலாம் கோன் ஆளுர், வாக்கு வன்மையுடையவர்களை நாவலர் என்று சொல்வது வழக்கம். யாழ்ப்பாணத் தில் பிறந்து தமிழுக்கும் சைவத்துக்கும் ஈடு எடுப்பில், லாத தொண்டுபுரிந்து விளங்கிய ஆறுமுக நாவலரை நாவலர் என்று சொன்னலே போதும் ; அவருடைய சொற்பொழிவாற்றல் அவ்வளவு சிறப்புடையது. அப்படியெல்லாம் சிரமப்படாமல், நாவலர் பட்டம் கிடைக்க வேண்டுமானுல் திருநாவலூரிற் பிறந்தாற். போதும். அது நாவல் , அதில் பிறந்தவர் நாவலர். இது என் கற்பனை அன்று : சுந்தரமூர்த்தி நாயனுர் காட்டிய வழி; திருநாவலூரிற் பிறந்தவர்களிற். சிறந்தவராதலின் அவரை நாவலர்கோன் என்று சிறப்பித்துச்சொல்கிருேம், நாவல் மரத்தைக் கண்டவுடன் என் சிந்தனை இப்படியெல்லாம் ஓடியது. நல்ல வேளை கட்டுக் கதைகளாகிய நாவலே நான் நினைக்கவில்லை. அது. ஆங்கில வார்த்தை அல்லவா ? அதையும் சேர்த்துக் கொள்வதானுல் நாவலர் என்பதற்கு நான்கு பொருள் கள் கிடைக்கும். பழங்காலத்தில் நன்ருகக் கவி பாடுகிறவர்களே நாவலர் என்று சொல்வார்கள்; அது முதல் பொருள். பிறகு நன்ருகப் பேசுகிறவர்களே நாவலர் என்ருர்கள் ; இது இரண்டாவது பொருள். நாவல் எழுதுகிறவர்களே நாவலர் என்று சொல்ல லாம்; இது புதிய மூன்ருவது பொருள். திருநாவ லூரிற் பிறந்தவர்களே நாவலர் என்று கூறலாம்; இதற் குச் சுந்தரமூர்த்தி நாயனரின் வாக்கு ஆதாரம் ; இது கான்காவது பொருள்.