பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் தோன்றிய ஊர் 121 காணலாம். அவர் திருக்கைலாயத்துக்குப் போகும் போது யானையின்மேல் சென்ருர். ஆதலால் சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்குத் தனியே சந்நிதி இருந்தால் அங்கெல்லாம் முன்னே யானே வாகனந்தான் இருக் கும். இங்கும் அதைக் காணலாம். வெளிப்பிராகா ரத்தைச் சுற்றி வருகையில் பின்னே திருமதிலில் ஒரு பெரிய யானையும் அதன்மேல் ஒருவர் உருவமும் இருப்பதைக் கண்டேன். "சுந்தரமூர்த்தி சுவாமிகள் யானையின்மேல் ஏறிக் கைலாசம் செல்லும் கோலம் இது' என்று அன்பர்கள் காட்டினர்கள். 'இது இவ்விடத்தில் இயற்கையாக இருப்பதாகத் தெரியவில்லேயே வேறு எங்கிருந்தோ கொண்டு வந்து பதித்திருக்க வேண்டும்’ என்று எனக்குத் தோன்றியதைத் சொன்னேன். அன்பர்கள் அதை ஒப்புக் கொண்டார்கள். ஆனல் எங்கிருந்து கொண்டு வந்தது என்பதை அவர்களால் சொல்ல முடியவில்லை. யானையைப் பார்த்துவிட்டு மேலே நடந்தேன். அந்தப் பிராகாரத்தில் அம்பிகையின் திருக்கோயில் தனியே இருக்கிறது. மனேன்மணி என்பது அம்மை யின் திருநாமம். அம்பிகையைத் தரிசித்துக் கொண்டு பிராகாரத்திள் வழியே வலம் வரும்போது அங்கே நின்ற நாவல் மரத்தைக் காட்டி, 'இதுதான் இந்தத் தலத்துக்குரிய புனித மரம்' என்று அன்பர்கள் சொன்னர்கள். திருநாவலூர் என்ற பெயருக்குக் காரணம் தெரிய வந்தது. சுந்தரர் நாவலர்கோன், நாவலாரூரன் என்று தம்மைச் சொல்லிக்கொள்கிருர். நாவலூர் என்பது நாவல் என்று குறுகிப் பாட்டில் வருகிறது. நாவலில் பிறந்தமையால் சுந்தரர் நாவலர்