பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

!?!} வாருங்கள் பார்க்கலாம திருத்கோயிலுக்குச் சென்றேன். இரண்டு பிரா காரங்களேயுடைய அக்கோயிலில் எங்கும் உள்ளது போல் கோபுரம் நிமிர்ந்து நின்று வரும் அடியார்களே வாருங்கள், வாருங்கள் என்று அழைக்கின்றது. உள்ளே துழைந்து வெளிப் பிராகாரத்தைச் சுற்றிப் பார்க்கலாம். வழியில் நெருஞ்சி முள்ளில் கால் வைக்காமல் நிதானமாக நடக்க வேண்டும். ஒரறி வுயிர்களாகிய புல் பூண்டுகளும் கெடக்கூடா வென்று அவற்றை ஒன்றும் செய்யாமல் வைத்திருக் கிருர்கள். வெளிப்பிராகாரத்தைப் பிரதட்சிணம் செய்யும் பொறுமை இங்கே வரும் பக்தர்களுக்கு இல்லையென்றே நினைக்கிறேன். நேரே ஆண்டவ னிடம் போகவேண்டும் என்ற வேகம் அவர்களுக்கு. நமக்கு அவ்வளவு தீவிரமான பக்திவேண்டாம். நிதானமாகக் காலில் முள் குத்தினுலும் எடுத்து எறிந்து விட்டு மெல்ல மெல்லப் போகலாமே. இங்கே என்ன அவசரம்? ரெயில் ஊதிவிடுமா ? அல்லது பஸ்ஸுக்கு நேரம் ஆகிவிடும் என்று துரிதப்படுத்த வேண்டுமா ? இரண்டு வசதியும் இல்லாமல் விருப்பு முள்ளவர்கள் வந்து இறைவனைத் தரிசனம் செய்து இன்புறுவதற்கு ஏற்றபடி தனிமையில் இலகுகிறது ஊர். வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க' என்று மாணிக்க வாசகர் சொல்கிருர். இந்த ஆலயத்தில் வேகமின்றி மெல்லவே பார்க்க லாம். - - - வெளிப்பிராகாரத்தில் இடப்பக்கத்தில் சுந்தர மூர்த்தி நாயனர் தேவிமாருடன் திருக்கோயில் கொண்டிருக்கிருர் கையில் தாளத்தைப் பிடித்த கோலத்தில் மேற்கு நோக்கியபடி, அவர் நிற்பதைக்