பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுக்தரர் தோன்றிய ஊர் 119 இறங்கிப் போகவேண்டும். ஊர் சிறியதுதான். ஆலுைம் அதன் பெருமை பெரிது. முன் பெல்லாம் இதைத் திருநாமநல்லுரர் என்று சொல்லி வந்தார்கள். பெரும்பாலும் ஊர்களின் பெயர்கள் உருவம் தேய்ந்துதான் வழங்கும். திருச்சிராப் பள்ளியைத் திருச்சி என்றும், பழைய ஜயங்கொண்ட சோழபுரத்தைப் பழைய சங்கடம் என்றும் சிதைத்துச் சொல்வது நமக்கு வழக்கமாகப் போய்விட்டது. திரு. நாவலூருடைய பெயரோ விரிந்திருக்கிறது; திரு நாமநல்லூர் என்று அதிக எழுத்துக்களைப் பெற்று' விட்டது ! ; திருநாவலூருக்கு நான் போனபோது சுந்தரர். பிறந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவ லோடு போனேன். திருஞானசம்பந்தர் பிறந்த இடம் இப்போது குடியிருக்கும் வீடாக இருக்கிறது. அப்பர் சுவாமிகள் பிறந்த இடத்தில் மரமும் மேடையும் இருக்கின்றன. சுந்தரர் பிறந்த இடம் எப்படி இருக்' கிறது ? மற்ற இரண்டு இடங்களேயும்விட இது ஊராருடைய சிரத்தையை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது. சுந்தரர் மடம் என்ற கட்டிடம் ஒன்று இப்போது கோயிலை அடுத்த வீதியில் கிழக்குப் பார்த்து இருக்கிறது. அதுதான் சுந்தரர் திருவவ தாரம் செய்த இடம் என்று சொன்னர்கள். அவ் விடத்தில் பஜனை நடந்து வருகிறதாம். சுந்தரர் படத்தை வைத்துப் பூசித்து வருகிருச்கள். அந்த மடத்துக்கு எதிரே இரண்டு மூன்று ஆதி சைவர் களின் வீடுகள் இருக்கின்றன. அந்த வீதி முன்பு சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.