பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..1#3 வாருங்கள் பார்க்கலாம் ஆரூரர் என்ற திருநாமத்தோடு சடையனருக் கும் இசை ஞானியாருக்கும் அருமைக் குழந்தையாய் உதித்து நரசிங்க முனையரையர் விரும்பித் தம் வளர்ப்புப் பிள்ளையாய் ஏற்று மகிழநின்ற பெருமானே சுந்தரமூர்த்தி சுவாமிகள். திருத்தொண்டத் தொகை என்ற பதிகத்தை அவர் பாடியதல்ை, அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றிய செய்திகளே உலகம் அறிய முடிந்தது. அந் த த் திருத்தொண்டத் தொகையைச் சற்றே விரித்து நம்பியாண்டார் நம்பி என்ற பெரியார் திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலைப் பாடினர். இந்த இரண்டையும் பின்பற்றி விரி வாகப் பெரிய புராணத்தைப் பாடினர் சேக்கிழார். பல்சுவைக்கனிகளும் கனிந்துதிகழும் பெரியபுராணம் என்னும் கற்பகமரத்துக்கு விதை திருத்தொண்டத் தொகை. இதை நினைத்தே பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார், கேசம் கிறைந்த உள்ளத்தால் நீலம் கிறைந்த மணிகண்டத்து ஈச அடியார் பெருமையின எல்லா உயிரும் தொழ எடுத்துத் தேசம் உய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த திருவாளன் வாச மலர்ைென் கழல்வனங்க வந்த பிறப்பை வணங்குவாம் என்று மனமுருகிப் பாடியிருக்கிருர். . சுந்தரமூர்த்தி சுவாமிகள் பிறந்த திருநாவலுர ருக்கு உளுந்துார்ப்பேட்டை ரெயில்வே ஸ்டேஷனில்