பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வாருங்கள் பார்க்கலாம் வரதராஜப் பெருமாளேயும் தரிசித்துக் கொண் டேன். இனிமேல் உள் பிராகாரத்தில் போய்ப் பார்க்க லாமா ? இங்கே ஓர் உண்மையைச் சொல்லிவிட எண்ணுகிறேன். நான் முதலில் உள் பிராகாரத்துக் குள் புகுந்து சுவாமியைத் தரிசித்து விட்டுத்தான் வெளிப்பிராகாரத்தை வலம் வந்தேன். கோயில் வாயில் திறப்பதற்காகக் கொஞ்ச நேரம் வெளிப் பிராகாரத்தில் நின்றுகொண்டு சுவரில் உள்ள சிலாசா சனங்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். நான் நேரே உட்பிராகாரத்துக்குள் போனதற்கு, முதலில் இறைவனைத் தரிசிக்க வேண்டும் என்ற பக்தி காரணம் அல்ல ; என்னவோ போனேன். எப்படியாளுல் என்ன? நான் கண்டதைச் சொல் கிறேன். இறைவன் திருக்கோயிலுக்குள் நுழைந்தேன். சுவாமிக்குப் பக்தஜனேசுவரர் என்பது திருநாமம். பக்தஜன ரட்சகர் என்றும் சொல்வது உண்டு. அர்த்த மண்டபத்தில் புகுந்தேன், ஆ ! என்ன அற்புதம் சாட்சாத் சுந்தரமூர்த்தி சுவாமிகள் உபய நாச்சியார்களோடு எதிரே நின்ருர், என்ன அழகு! என்ன அழகு! நரசிங்கமுனையரையர் ஒரு பக்கத்தில் நின்ருர். மிகவும் அழகான திருவுரு வங்கள். சுந்தரமூர்த்தியைக் கண் இமைக்காமல் பார்த்தேன். அத்தகைய அழகிய விக்கிரகத்தை வேறு எங்கும் காண முடியாதென்றே நினைக்கிறேன். எத்தனே நாழிகை நின்று பார்த்தாலும் தெவிட்டாத அழகு சொட்டும் உருவங்கள் அவை. . . .