பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் தோன்றிய ஊர் 125. உள் பிராகாரத்தை வலம் வரும்போது தெற்கு நோக்கியுள்ள தட்சிணுமூர்த்தி சந்நிதியில் ஒரு புதுமை கண்டேன். பெரும்பாலும் தட்சிணுமூர்த்தி கல்லாலின்கீழ் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தரு ளியிருப்பார். இங்கே நிற்கும் தட்சிணுமூர்த்தியைக் கண்டேன். பின்னே இடப வாகனம் நின்று கொண் டிருக்க அதன்மேல் சற்றே சாய்ந்தபடி நிற்கிருர், இங்குள்ள தென்முகக் கடவுள். அம்மூர்த்தி மிகப் பழங்காலத்தவர் என்பது பார்த்தவுடனே தெரிகிறது. இவ்வூரில் சுந்தரர் செந்தமிழ்க் கழகம் என்ற சபை ஒன்று இருக்கிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருநட்சத்திரத்தைச் சபையினர் சிறப்பாகக் கொண் டாடுகிருர்கள். அதைச் சார்ந்தவர்களுக்குத் திரு. நாவலூரைப்பற்றித் தமிழுலகம் நன்ருகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று இருக்கும் ஆசைக்கு அளவே இல்லை. அந்தக் கோயிலைத் தலையில் தூக். கிக்கொண்டு ஊரூராகச் சென்று, எங்கள் ஊர் ஆலயத்தையும் அற்புதமான மூர்த்திகளேயும் பாருங் கள், பாருங்கள்! இந்த மாதிரி வேறு எங்கேயாவது பார்க்கமுடியுமா ?' என்று சொல்ல முடிந்தால் அதற். கும் அவர்கள் ஆயத்தமாக இருக்கிருர்கள். ஆணுல் அது நடக்கக்கூடிய காரியமா ? இதற்கு ஒரு புராணம் இருக்கிறது. எழுபது ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்திருந்த திருவெண்ணெய் நல்லூர் இராசப்பக் கவிராயர் பாடியது. 51.4 பாடல் கள் உள்ளது. 1889-ஆம் வருஷம் பதிப்பிக்கப் பெற்ற அது இன்னும் மறு பிறவி எடுக்கவில்லை. பக்தர்களைப்போல அதற்கு மறுபிறப்பே இல்லாமற். போய்விடுமோ என்று கூட அஞ்சுகிறேன். எத்